பக்கம்:புதையலும் பேழையும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 புதையலும்

‘கடவுள் எழுதிய நெடுநிலைக் கந்து எனப்பட்டது. இவ்வாறு உயரமாக எழுந்தவை பலவும் நெடுநிலை’ என்று இலக்கியங் களில் குறிக்கப்படுகின்றன. நெடுமை’ என்பது உயர வளர்ச்சி யைக் குறிப்பது. நெடு நெடு என்று வளர்ந்தது' என்று வழக்கில் பேசுவதையும் அறிவோம். சில இடங்களில் நீட்சியையும் குறிக்கும். இந்த நெடுமை முயற்சியை அடுத்து,

"சுடுமண் நெடுமதில் சுற்று” (புறப்பொருள் வெண்பா மாலை: 113.) உருவாகியது. இது சுற்றுச்சுவர் என்றும் மதிற்கவர் என்றும், அரண் என்றும் நிலைக் கேற்பப் பெயர் பெற்றன. சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு' எனப் பெரும்பாணாற்றுப்படை (405) அரண் சூழ்ந்த நகரைக் குறிக்கின்றது. - .

அரிய சான்றோர்க்கும், அரசர்க்கும் கணவருடன் மாய்ந்த கற்புடைப் பெண்டிற்கும், இறந்தோரில் சிறந்தோர்க்கும், சிறு தெய்வங்களுக்கும் கல்லறைகளும் கோட்டங்களும், -

'குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன

சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்ட" -மாகஎழுந்தன. அந்நெடுநிலையாகவே மன்னால் பூத உருவங் களை அமைத்தனர். இக்காலத்தும் ஐயனார், பிடாரி கோட்டங் களில் மண்ணால் அமைக்கப்படும் நெடுநிலை வடிவங்களைக் காண்கின்றோம்.

மாடம் எழுந்தது.

இவ்வாறு வான் நோக்கி உயர்த்திக் கட்டுவதில் தமிழனது எண்ணம் வளர்ந்தது. இவ் எண்ணத்தால் மாடம்’ என்னும் கட்டட கட்டு + அடம் அமைப்பு பிறந்தது. தழையையும் புல்லையும் ஒலையையும் வேய்ந்து கட்டிய மனைகள் நிற்க ஒன்றும் வேயாது கட்டிய வேயா மாடம் தோன்றியது. வேயா மாடத்தை,

'தட்டு ஒடு இட்டுச் சாந்து வாரப்பட்டது" என்று உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்கியுள்ளார். 'கற்றை முதலியவற்றால் வேயாது சாந்திட்ட மாடம்: என்பது நச்சினார்க் கினியர் விளக்கம். புகார் நகரம், - .

1 மணி : சக்கரவாளம் : 58, 59