பக்கம்:புதையலும் பேழையும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 புதையலும்

போரில் வீரர், முகத்திலும் மார்பிலும் தோள்களிலும் பெறும் புண் விழுப்புண் எனப்படும். அப் புண்ணை நாள் தோறும் பெறுவதில் வீரருக்குத் தனிஉவப்பு. விழுப்புண் பெறும் நாள்தான் வாழும் நாள் எனக் கருதினர். விழுப்புண் படாத நாள் வழுக்கி வீணான நாள் என்று அந்நாளை வாழ்நாள்களில் ஒன்றாகக் கணக்கிடாமல் ஒதுக்கி விடுவராம். இதனைத் திருவள்ளுவர்,

'விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள்

வைக்குந்தன் நாளை எடுத்து’’’

இப்புண்னைச் சிறந்த புண் - விழுப்புண் என்றார், மனோன்மணிய ஆசிரியரோ,

'புண்ணோ! புகழின் கண்ணே” எனப் "புகழின் கண்” என்றார்.

விழுப்புண் காய்ந்து வடுவாகும். வீரர்க்கு இவ்வடுக்கள்,

வெற்றியின் அறிகுறி; விர உரிமையின் அறிகுறியாக உறுப்புகளில் எழுதப்பட்ட எழுத்துகள் -என்றார் இசயங்கொண்டார். மனோ ன் ம ணி ய ஆசிரியர் பேராசிரியர் சுந்தரனார் போர் வடு,

வெற்றித் திருமகள் முத்தமிட்டு அளித்த முத்திரை”*

-என்றார்.

வடிந்த யாக்கை.

தோயன்மாறன் இத்தகைய முத்திரை வீரன். இம்முத்திரை யாம் வடுக்கள் வீரர் உடலுக்குத் தனி அழகாகப் பொலிந்து விளங்கின. .

| குறள் 778,

2 மனோன் : 4 : 1 : 180. -

3 அலகில் வெற்றியும் உரிமையும் இவையென

அபய வத்தினில் எழுதிய அறிகுறி - . . "

அவையெனப்பல வடு திரை யுடையவர்-கலிங், பு : 840.

4 மனோன் : 4 1 : 149, 150, . . . . . . -