பக்கம்:புதையலும் பேழையும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குட்டுவன் எடுத்த கோட்டம்.

புதிர்க்கு ஓர் அதிர்வு.

கண்ணகியார்க்குச் சேரன் செங்குட்டுவன் சிலைநாட்டிக் கோட்டம் எடுத்த நிகழ்ச்சி, - -

தமிழக வரலாற்றில் ஒரு புகழ்முடி; உலக வரலாற்றில் ஒரு புதுமை ஏடு; தமிழர் மறக்கக் கூடாத பெருமைச் சின்னம்.

இது, - மறுக்க முடியாத வைரத் தூணாகவும் திகழ வேண்டும்.

இதற்கு, ஒர் ஆய்வு முத்திரை குத்தியாக வேண்டும். கண்ணகியார் தம் இறுதிக் காலத்தில் ஏறி நின்ற நெடு வேள் குன்றம் எது? அக்குன்றிற் பதினான்கு நாள்கள் நின்று இயற்கை எய்திய வேங்கைக் கானலின் தடத்தைக் காண முடியுமா? சேர மன்னன் குட்டுவன் எடுத்த கோட்டம் எங்கே?

வடித்த சிலையைக் காணக் கூடுமா?

-இவ்வினாக்கள் நிறைவாக

விடுவிக்கப் படாப் புதிர்களாகவே நின்றன. அவிழ்க்க முடியா முடிச்சுகளாகவும் இறுகி இருந்தன. -