பக்கம்:புதையலும் பேழையும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

à

h

l

பேழையும்

ஒன்று : கண்ணகியார் ஏறிநின்ற வேங்கைக் கானல்,

இரண்டு : செங்குட்டுவன் இமயக் கல்லில் சிலை வடித்து

எடுத்த கண்ணகிக் கோட்டம். .

முதற்கருத்தாகிய சிலப்பதிகாரத்தில் குறிக்க ப் படும் வேங்கைக் கானல் அமைந்த 'நெடுவேள் குன்றம் திருச்செங்கோடு என்றும், திருச்செங்குன்று என்றும் தமிழகத்து இலக்கிய அறிஞர் களால் கருதப்பட்டது. இந்த அடிப்படையில் இரண்டு ஊர் களிலும் கண்ணகியார்க்கு விழாக்கள் எடுக்கப்பட்டன.

இதுபோது கம்பம் பள்ளத்தாக்கை அடுத்துள்ள சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்னும் கருத்து வெளிப் பட்டுள்ளது. ; - -

இவ்வேங்கைக் கானல் அமைந்த நெடுவேள் குன்றம் பற்றிய கருத்தைக் கேரள ஆய்வாளர் அணுகியதாகத் தெரியவில்லை. நெடுவேள் குன்றம் என்பது சுருளிமலைப்பகுதி அன்று’ என்றா வது மறுக்கும் கருத்தையும் அறிவித்தார் அல்லர். எனவே, அன்னார் இதில்-கண்ணகியார் நின்று மறைந்த வேங்கைக் கானல் கருத்தில்-கருத்தைச் செலுத்த வேண்டியதில்லை' என்று கருதியிருக்கலாம்; அன்றி, உடன்பாடாகவும் அமையலாம். -

ஆனால், இம் முதற் கருத்து இரண்டாவது கருத்திற்குத் துணை நிற்பது மட்டுமன்றி அரண் கோலுவதும் ஆகும்.

எவ்வாறு?

எவ்வகை ஆய்விற்கும் அகச்சான்றுகள், புறச்சான்றுகள் தடயங்கள், சின்னங்கள் முதலியவற்றை நாடவேண்டும். இவ் ஆய்விற்கும் அவையே கைகொடுப்பன. அவற்றுள் மூலச் சான்றாகத் தலைநிமிர்ந்து நிற்பது சிலப்பதிகாரம் என்பது முடிந்த முடிபு. இது மறுக்கப்பட்டால் ஆய்விற்கு அடித்தளமே இல்லாமற் போகும். எனவே, சிலம்பைச் சுண்டிக் காண்போம்.

வையை வழி.

மதுரை தீக்கிரையாயிற்று. கண்ணகியார் மதுரை நகரின் மேற்குத் திசை வாயில் வழியாக மதுரை நகரைவிட்டு வெளி யேறினார், இரவும் பகலுமாக நடந்து மயங்கிய நிலையில்,