பக்கம்:புதையலும் பேழையும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 புதையலும்

"மலையிடைப் பிறவா மணியே என்கோ'

-என்பது கோவலன் புகழும் முதற் புகழ்ச்சி. முதற் புகழிலேயே மணியாகப் புகழவைத்து மகிழ் கின்றார் அடிகளார். கண்ணகியாரை மணியாக்கும் அடிகளார் முதன்முதலில் கண்ணகிக்கு உரியவனான கணவன் வாயால் ஆக்கியது ஒரு சிறப்பான அமைப்பு எனலாம்.

அடுத்து, வேட்டுவ வரியில் சாலினி என்னும் பூசாரிச்சி தெய்வமுற்று எழுந்து கண்ணகியாரைப் புகழ்கின்றாள் :

'இவளோ, கொங்கச் செல்வி, குடமலை யாட்டி,

ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமா மணி :

- என்ற சாலினியின் புகழ்ச்சியில் கண்ணகியாரை ஒரு மாமணியாகக் காண்கின்றோம்; திருமாமாணி யாகக் காண்கின்றாம். கணவன் வாயால் மணியாகக் காட்டிய அடிகளார் தெய்வ முற்றவள் வாயால் மாமணியாகக் காட்டினார்.

அடுத்து, அடைக்கலக் காதையில் கண்ணகியார் மணியா கின்றார். மதுரை மாநகரின் புறஞ்சேரியில் மாடல மறையோன் என்னும் அந்தணன் கண்ணகியாரையும் கோவலனையும் காண் கின்றான். கண்டவன் கோவலனது பெருமையெல்லாம் பேசு கின்றான். பேசி நிறைவேற்றுபவன்,

'இத்திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது" - எனக் கண்ணகியாரை மணிக்கொழுந்தாகப் புகழ்கின்றான்.

அடிகளார் முதலில் உரியவன் வாயால் 'மணி’ என்று புகழ வைத்தார். அடுத்துத் தெய்வமுற்ற சாலினி வாயால் மணி மணியாகப் போற்ற வைத்தார். அடுத்து, மாடலன் என்னும் துறவி வாயால் மணிக்கொழுக்'தாகப் பெருமைப்படுத்தினார். இவற்றிலெல்லால் படிப்படியாக உயர்வைக் காண்கின்றோம்.

1 சிலம்பு . மனையறம்... , 77 2 சிலம்பு : வேட்டுவ வரி : 41-50,