பக்கம்:புதையலும் பேழையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் சான்று

'அம்மா' என்னும் சொல் மாந்தர் இனத்தின் முதற்சொல். இச் சொல் குழந்தையினது உணர்ச்சி வெளிப்பாட்டின் ஒலி யுருவம். மேலும் மாந்தரினத்தின் இயல்புப் போக்கில் எழுந்த மொழி தமிழ் என்ற உண்மைக்குச் சான்றாகத் திகழ்வது.

இயற்றமிழ் எழுந்த சிறப்பை இயம்ப எழுந்த பாவேந்தர் பாரதிதாசனார்,

'அம்மாவென் றழைத்தல், காகா

எனச்சொல்லல், அஃகென் றொன்றைச் செம்மையிற் சுட்டல் என்னும்

இயற்கையின் செறிவி னாலே : இம்மாநி லத்தை யாண்ட & இயற்றமி ழேயென் னன்பே! - - சும்மாதான் சொன்னார் உன்னை

ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே"1

-என்று பாடினார்.