பக்கம்:புதையலும் பேழையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - $3.

"சாத்தா என்பதே எதிர்முகமாக்குமாயினும் அம்மா என்பதும் அவ்வெதிர்முகமே குறித்து நிற்றலின் விளி யாகக் கொள்ளப்படும் என்பார் (என்று கூறும் தொல் காப்பியர்) விளியொடு கொள்ப என்றார்' -எனக்கூறித் தொல்காப்பியரின் உள்ளக்கிடக்கை அம்மா வினிப்பொருளைத் தருவது என்பதைக் காட்டினார். இதனால், இளம்பூரண்ச் தொல்காப்பியரது சொற்படி தெரியுமோரின் கருத்தை ஏற்றுத் ‘தெரியுமோர்ாக'வும் ஆனார். -

எனவே, அம்மாவின் மூலச்சொல் 'அம்ம’ என்பதும், அது விளிப்பொருளில் வரும் என்பதும் தெளிவாகின்றன. இவ்வா றாகவே, அம்மாவின் முதன்மையை அம்ம’விடம் கேட்க வேண்டி யவர்களாகின்றோம். அம்மதானே கேட்பிக்கும்!

வரலாறு.

'அம்ம’. இலக்கியத்தில் பெற்றுள்ள

சிறப்பை முன்னே கண்டோம். அஃது இலக்கணத்தில் ஒருவகையான சிறப்பிடம் பெறுகின்றது. பெயர்ச்சொல் விளியேற் கும் மரபைக் கூறும் தொல்காப்பியப் பகுதி விளி மரபு எனப்படும் விளியேற்றற்கு உரிய சொல் பெயர்ச்சொல்லே. எனவே, விளி மரபில் பெயர்ச் சொற்களே குறிக்கப்படும். இவ்விளிமரபில் குறிக்கப்படும் ஒரே இடைச்சொல் அம்ம’ என்பது. இவ்வாறு இவ்வொரு சொல் தனியிடம் பெறுகின்றது. இஃது அச்சொற்குக் குறிப்பிடத்தக்க இரண்டாவது சிறப்பு. 3.

அம்மாவின் அம்மா

மேலும், இவ்வியலில் ஆராய்ச்சிக்கு உரியோர்பால் இவ் வொரு சொல்லே சார்த்தப்பட்டுள்ளது. விளியோடு கொள்ப தெரியுமோரே' என்னும் தொடரை முன்னே கண்டோம். இவ் வகையில் இச்சொல் ஆய்வில் அமைந்து 'அம்மா’ என விளி யாவதற்கு ஆராய்ச்சிச் சான்றோர்பால் சான்று பெறுகின்றது. இஃதும் இச் சொல்லுக்குக் குறிப்பிடத்தக்க மூன்றாவது சிறப்பாகும். - - -

இனி, இத்தகைய சிறப்புகள் கொண்ட அம்ம’ என்னும் சொல்லை ஆய்வது கொண்டே 'அம்மா என்னும் சொல்லின் முதன்மையைக் காணலாம். :هر ی: ، ت