பக்கம்:புதையலும் பேழையும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புதையலும்

"மா எனல் கூவுதல் வாவெனல் மத்தல்

அகவ லென்பது அழைத்த லாகும்' ----- என்று பொருள் வகுத்தது. இஃது இங்கே நோக்கத்தக்கது. அழைக்கும் பொருட் குறிப்பில் உருவான ‘அம்மா கால வளர்ச்சி யில் அம்மா என்னும் விளிச்சொல்லாகி 'அம்ம' 'அம்மா ஆகும் என மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியம் இலக்கணம் குறிக்க இலக்காயிற்று.

'அம்மா' என அழைக்கும் பொருட் குறிப்பில் உணர்வுச் தாய்மேல் சேய் கொண்ட் உள்ளுணர்வின் உள் சொல் இசையாக அச்சொல் முரல்கின்றது அம் முரல்வு பலவகை உணர்வுகளுக்கும் பின்னிசையாய் நிற்பது ஒரு தொடர்பு எனலாம்; ஒரு வியப்பு என்றாலும் தகும்.அஃதாவது 'அம்மா’ என்னும் சொல்லில் பலவகை உணர்வுகள் வழங்கப் படுகின்றன என்பதாம். இவ்வுண்மையை இலக்கியத்தில் பல முனைகளில் அமைந்துள்ள அம்மா’ என்னும் சொல்லின் பொருட் குறிப்பைக் கொண்டு நன்கு காண்கின்றோம். -

'அரங்கத் தம்மா

பள்ளி எழுந்தருளாயே”

(நாலா : திருப்பள்ளி : 1 : 4)

-என்பதில் தந்தையையும் தாயாகக் கொள்ளும் உணர்வைக் காண்கின்றோம்.

'சிற்றடியவர்க்கே குற்றவேல் தலைக்கொண்டு

அம்மா கிடைத்தவா என்று செம்மாப் புறுTஉம் திறம்பெறற் பொருட்டே? இதில் குமரகுருபரரின் செம்மாப்பு உணர்வை அவரது 'அம்மா' சொல்லில் காண்கின்றோம். -

1 பிங், நி : 1996 : 2, 4 - 2 மதுரைக் கலம்பகம் : 2 : கரி : 1.7.19