பக்கம்:புதையலும் பேழையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 21

'அம்மா நம்மேல் பட்டது அருங்கூடற்

பெம்மான் மேற்பட்ட பிரம்படி: -இங்கு ஒரு பெண்ணின் காம உணர்வு வடிக்கப்படுகின்றது.

வெறும் பொருளதம்மா” என்னும் திருத்தக்கதேவர் தொடரில் இரக்க உணர்வை அம்மா காட்டுகின்றது.

'ஆ அம்மா அம்மா என் அம்மா அகன்றனையே’, என்று அரசி விசையை தன் அவல உணர்வை வடிக்கத் திருத்தக்க தேவர் 'அம்மா, அம்மா’ என அடுக்கி வைத்துள்ளார். அவ்வடி யின் பின் வந்துள்ள, “என் அம்மா" - என் அன்புக்குரியமகனே! என்னும் தாய்ப்பொருள் இல்லாத இலக்கணையாக விளியைத் தருகின்றது. -

“தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு” என்னும் குறளில் அம்மா இன்பத்தினவாம் உணர்வை வடிப்ப தாகக் கொள்ள வேண்டும். (அ+மா=அரிவை- அந்த அழகிய பெண் என இங்கும், இதுபோன்ற பிற இலக்கிய இடங்களிலும் பொருள் கூறப்படினும் இவ்விடத்தில் 'அம்மா' என்னும் இடைச் சொல்லாகக் கொள்ளுதற்கு இக்குறள் அமைந்த அதிகாரத்தில் அமைந்துள்ள அண்மைச் சுட்டுச்சொல் ("தீ யாண்டுப் பெற்றாள் இவள்’) இவ்விடத்தில் அகரச் சேய்மைக் சுட்டாகக் (அந்த என்று கொள்ளுதற்கு இடம் தரவில்லை.)

பெற்றோரைக் குறிக்கும் சொற்களினின்று, இரக்கக் குறிப்பு இடைச்சொற்களும், வியப்புக் குறிப்பு இடைச் சொற்களும் தோன்றியுள்ளன.4 -எனப் பாவாணர் அவர்கள் குறித்துள்ளமை இங்கே இயைத்து நோக்கத் தக்கது.

1 மது. க :57 : 1, 2, 2 சீவ. சி : 2662. 3 குறள் ! 11.07, 4 முதல் தாய்மொழி பக்கம் : 240,