பக்கம்:புதையலும் பேழையும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 41

'அறுத்திடு தலைகள் வீழ

ஆயிரம் சென்னி வல்லே மறித்துவந் தெழுத லோடும்” .

- எனக் கச்சியப்பர் பாடினார்,

இவ்வாறு வியத்தகு நிலையில் முளைத்த தலைகளை விளக் கும் நோக்கம் கொண்டதன்று இக்கட்டுரை. ஏனெனில், இவை தலையில் முளைத்த தலைகள் அல்ல. கழுத்தில்முளைத்த தலைகள் ஒரு தலை விழுந்து, அறுபட்ட கழுத்திலிருந்து அன்றோ மீண்டும் மீண்டும் முளைத்தன?

தலை வீழாமலேநிலைத்திருக்க, அத்தலையில் மேலும்மேலும் தலைகள் முளைத்தால் அது வியப்பினும்வியப்பு: நயப்பினும் நயப்பு. இவ்வியப்பையும் நயப்பையும் சொல்லின் வரலாறாம் மொழியி யலில் காணலாம்.

கதையியலில், மூலத் தலை வீழ்ந்து போகும்; முளைத்த தலைகளும் வீழும். இறுதியில் தலையே இல்லாமல்வெற்றுடல்தான் எஞ்சும். இது போர்க் கொலை.

மொழியியலில் மூலச்சொல்லும் நிற்கும்; அதன்கண்முளைத்த கிளைச் சொற்களும் விளங்கித் தோன்றும். காலமெல்லாம் நிலைத் தும் நிற்கும். இது சொற்கலை,

கொலைப்போர்த் தலைகளை விடுத்துக்

கலைச்சொல் தலைகளைக் காணலாம்,

சொல்லின் தன்மை,

"எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே? - என்று தொல்காப்பியர் சொல்லினுடைய உயிரோட்டத்தைக் குறித்தார். தொடர்ந்து, 'சொல் தன்னை உணர்த்தும் தன்மை யைக் கொண்டது பொருளைத் தெரிவிக்கும் தன்மையைக் கொண்டது -என்று முன்னோர் வழிநின்று மொழிந்தார்.

1 க, பு - சிங்கமுகா சுரன் :488

2 தொல், சொல் : 1.55,

3 'பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்

சொல்லி னாகும் என்கனார் புலவர்' -தொல் : சொல் : 156,