பக்கம்:புதையலும் பேழையும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - புதையலும்

பிணிகிடந்தார்க்குப் பிறந்த நாள்.

இத்துணைப் பெருமைகளையும் நன்மைகளையும் கொண்ட

பிறந்த நாள் ஏதேனும் ஒரு குறையேனும் இல்லாதிருந்தால் கண்ணேறு பட்டுவிடும் போலும். அதற்கும் ஒரு குறை உண்டு.

ஆடவர் மகளிர் புணர்ச்சி இன் பத்திற்கு இப்பிறந்த நாள் ஒருதடையாயிற்று, ஆசாரக்கோவை இன்னின்ன நாளில் புணர்ச்சி இன்பம் கூடாது என்று விலக்கியுள்ளது. அவற்றுள் ஆடவர் தாம் பிறந்த நாளிலும் புணரக் கூடாது; மகளிர் தாம் பிறந்த நாளி லும் புணரக் கூடாது. அத்துடன் விட்டதா? இருபெருங் கடவுள ராகிய சிவனும் திருமாலும் பிறந்தநாள்களாகிய திருவாதிரையிலும் திருவோனத்திலும் புணர்ச்சி கூடாது என்றது. அப்படியானால் பிற தெய்வங்கள் பிறந்த நாளில்?’ என்று வினவக்கூடாது. ஆசாரக் கோவை இப்படி விதிப்பு வைத்திருக்கிறது என்பது ஒரு கருத்து.

அவ்வெண்பா இது :

'உச்சியம் போழ்தோ டிடையாமம் ஈரந்தி மிக்க விரு தேவர் நாளோ டுவாத்திதிநாள் அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும் ஒட்டார் உடனுறைவின் கண்' (ஆசா. கோ : 48)

வேறொரு உண்மை: -

நோயுற்றுப் படுக்கையிலிருப்போர்க்குப் பிறந்த நாளில் நோய் மிகும்; கடுமையை விளைக்கும்; சாவையும் தந்துவிடும் என்பர்.

தலைவி ஒருத்தி தலைவனைப் பிரிந்து வருந்துகின்றாள். குளிரேற்றும் வாடைக்காற்று சீறிக்கொண்டு விசியது. அது அவளுக்கு மேலும் காம ஊற்றத்தை ஏற்றியது. அதற்கு உவமை யாக, - -

"பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாள் போல - - அணியிழை அஞ்ச (வாடைக்காற்று சிறிக்கொண்டு) வரும்" என்றது முத்தொள்ளாயிரம். தமிழ் மருத்துவ நூல்களும் பிறந்த