இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒ. பிக்கு உன்னை நீயே துண்டித்துக்கொள்; உன்னை நீயே சோதனை செய்துகொள். உன்னை நீயே தற்காப்புச் செய்து கவனமாயிருந்தால், நீ இன்புற்று வாழ்வாய். '
பிக்குகளே ஆசாரியர் சீடனைத் தமது மகனைப் போலக் கருத வேண்டும். சீடனும் ஆசாரியரைத் தன் தந்தையாகக் கருத வேண்டும். இவ்வாறு அவ்விருவரும், ஒருவருக்கொருவர் மரியாதையும் அன்பும் கொண்டு, சங்கத்திலே வாழ்ந்து, விநய ஒழுக்கம் வளர்ந்து, பெருகி முன்னேறச் செய்து வெற்றி பெறுவார்கள். " ப. ராமஸ்வாமி | 69