பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இல்வாழ்வோர்களே சிறந்த ஒழுக்கத்தைப் பேணும் ஒருவன் அடையும் நன்மைகள் ஐந்து வகையானவை. முதலாவதாக, அந்த நன்மையாளன், ஒழுக்கத்தில் நிலைபெற்று, ஊக்கத்தினால் செல்வத்தைப் பெறுகிறான்; அடுத்தாற்போல், அவனைப் பற்றிய புகழுரைகள் எங்கும் பரவுகின்றன; மூன்றாவதாக அவன், கூடித்திரியர், பிராமணர், குடும்பத் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் முதலிய எவர்களுடைய கூட்டத்திற்குச் சென்றாலும், அவன் நம்பிக்கையும் தன்னடக்கமும் கொண்டு விளங்குகிறான்; நான்காவதாக, அவன் கவலையின்றி மரிக்கிறான்; கடைசியாக மரணத்திற்குப்பின் உடல் அழிவுற்றதும், அவன் மனம் சாந்தி இன்பத்தோடு இருக்கும். அவனுடைய கருமம் எங்கே தொடர்ந்து சென்றாலும், அங்கே சுவர்க்க இன்பமும்சாந்தியும் நிலவும். கிருகஸ்தர்களே, நல்வினையாளன் பெறும் ஐந்து வகை ஊதியங்கள் இவை ப. ராமஸ்வாமி | 71