உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36. நால்வகை வாய்மைகள் 1. ஒ பிக்குகளே!துக்கத்தைப் பற்றிய உயரிய வாய்மை இது: பிறப்பிலே வேதனை இருக்கின்றது; தளர்ச்சி வேதனை, பிணி வேதனை, மரணம் வேதனை, இன்பகரமாயில்லாதவைகளின் சேர்க்கை வேதனை, இன்பகரமானவைகளிலிருந்து பிரிதல் வேதனை. நிறைவேறாத ஆசையும் வேதனையானது. சுருங்கக் கூறினால், பற்றுக் காரணமாக எழும் ஐந்து உபாதானக் கந்தங்களுமே" வேதனையாயுள்ளவை.

2. ஒ பிக்குகளே துக்க உற்பத்தி பற்றிய உயரிய வாய்மை இது. உண்மையில் இதுதான் வேட்கை - புதுப்பிறவிக்குக் காரணமானதும், புலன்கள் இன்பத்தோடு அங்கும் இங்குமாக அலைந்து இன்பத்தேட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தூண்டுவதுமான வேட்கை அதாவது (காமம் முதலிய) உணர்ச்சிகளைத் திருப்தி செய்யவோ, எதிர்கால வாழ்வில் ஆசை கொள்ளவோ, அல்லது (இந்த வாழ்வில்) வெற்றியடையவோ, கொள்ளும் பேராவல். 3. ஒ. பிக்குகளே துக்க நீக்கத்தைப் பற்றிய உயரிய வாய்மை இது: வேட்கை சம்பந்தமான காமிய உணர்ச்சி எதுவும் எஞ்சியிராமல் அழிந்து விடுதலே இது (துக்க நீக்கம்) - இந்த வேட்கையை ஒதுக்கி உதறித் தள்ளிவிட்டு, இதிலிருந்து அறவே விடுதலையாகி. (உள்ளத்தில்) இது தங்குவதற்கு இடமேயில்லாமற் செய்தலாகும். 4. ஒ பிக்குகளே துக்க நீக்கத்திற்கு உரிய மார்க்கம் பற்றிய உயரிய வாய்மை இது; உண்மையில்,இது அஷ்டாங்க மார்க்கமே. அதாவது: நற்காட்சி நல்வாழ்க்கை நல்லுற்றம் நல்லுக்கம் நல்வாய்மை நற்கடைப்பிடி நற்செய்கை நல்லமைதி ஆகிய எட்டுப்படிகள் உள்ள வழி. ' - Er Hor பிக்குகளே! நால்வகை ஆரிய (மேலான) உண்மைகளை உணர்ந்து கொள்ளாமலும், ஊடுருவிப் பார்க்காமலும் இருந்ததாலேயே, நீங்களும் நானும், இந்தப் (பிறப்பு - இறப்பாகிய சம்சார) யாத்திரையில் நெடுந்துரம் சென்று சுற்றியலைந்துவிட்டோம்.' கந்தங்கள் - ஸ்கந்தங்கள்: அவை உருவு (ரூபம்) நுகர்ச்சி (வேதனை). குறி (ஸம்ஜ்ஞை), பாவனை (ஸம்ஸ்காரம்) உள்ள அறிவு (விஞ்ஞானம்) என்பவை. ப. ராமஸ்வாமி 77