37. அஷ்டாங்க மார்க்கம் (இது எட்டு அம்சங்களைக் கொண்ட பயிற்சி முறை. அந்த எட்டு அம்சங்களாவன: நற்காட்சி (Fight View), நல்லூற்றம் (Fight Aspiration), நல்வாய்மை (Fight Speech), நற்செய்கை (விழh:Activity), நல்வாழ்க்கை (Fight Living), நல்லுக்கம் (Hight Effort), நற்கடைப்பிடி. (Right Mindfu/ness), நல்லமைதி, (Right Contemplation)) நற்காட்சி: துக்கத்தைப் பற்றியும், துக்க உற்பத்தியைப் பற்றியும், துக்க நிவாரணத்தைப்பற்றியும், துக்க நிவாரண மார்க்கத்தைப் பற்றியும் அறிந்திருப்பதே நற்காட்சி எனப்படும். நல்லுற்றம்: நல்லுற்றம் என்பது என்ன, பிக்குகளே? (புலன் இன்பங்களைத்) துறத்தல், மனக்காழ்ப்புக் கொள்ளாமை, அஹிம்சை ஆகியவற்றில் உறுதியாக நிற்றலேயாகும். நல்வாய்மை: பொய்யுரையிலிருந்தும், புறங்கூறுவதிலிருந்தும், நிந்தைப் பேச்சிலிருந்தும், பயனற்ற சோம்பேறிப் பேச்சிலிருந்தும் ஒதுங்கியிருத்தல் பிக்குகளே, அதுவே நல்வாய்மை எனப்படுவது நற்செய்கை: உயிர்க்கொலை, தமக்கு அளிக்கப் பெறாதவைகளைக் கவர்ந்து கொள்ளல், முறை தவறிய சிற்றின்ப உணர்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து விலகல் - பிக்குகளே, அதுவே நற்செய்கை எனப்படும்! நல்வாழ்க்கை தவறான வழியில் வாழ்க்கை நடத்துவதை விட்டு, நியாயமான முறையில் ஆரியச்சிடன் தன் ஜீவனத்துக்கு வேண்டிய வருவாயைப் பெறுகிறான்-பிக்குகளே அதுவே நல்வாழ்க்கை நல்லூக்கம்: பிக்குகளே! இதிலே, (சீடன்) இதற்குமுன் தோன்றியிராத ஒழுக்கக் குறைவான நிலைமைகள் எழாதபடி சித்த உறுதியை ஏற்படுத்திக் கொள்கிறான். அவன் முயற்சி செய்கிறான், (அதற்குரிய) ஆற்றலைப் பயன்படுத்துகிறான், உள்ளத்தை (அதன்மீது) செலுத்தப் போராடுகிறான். இதேபோல, ஏற்கனவே எழுந்துள்ள தீய ஒழுக்கக் குறைவான நிலைமைகளை நீக்குவதற்கும் அவ்வாறே செய்கிறான். இதேபோல, இதுவரை தோன்றியிராத நல்ல நிலைமைகளைத் தோற்றுவிப்பதற்காக அவன் அவ்வாறு செய்கிறான். ஏற்கனவே எழுந்துள்ள நல்ல நிலைமைகள் நிலைபெறுவதற்காகவும், அவை: பழுதாவதைத் தடுப்பதற்காகவும், அவை பெருகும்படி செய்வதற் காகவும் அவைகளைப் பழக்கப்படுத்திப் பயன் பெறுவதற்காகவும் அவன் அவ்வாறே செய்கிறான். பிக்குகளே, இதுவே நல்லுக்கம் எனப்படும்.
r 78 புத்தரின் போதனைகள்