உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடல் சம்பந்தமாகத் தோன்றும் நுகர்ச்சி, மனம் சம்பந்தமாகத் தோன்றும் நுகர்ச்சி, இது நுகர்ச்சி எனப்படும். பிக்குகளே. ஊறு (ஸ்பரிசம்) என்பது என்ன? ஊறு ஆறு தொகுதிகளுள்ளது: கண், செவி, நாசி, நா, உடல், மனம் ஆகிய ஒவ்வொன்றின் சம்பந்தமாகத் தோன்றும் ஸ்பரிசம் - இது ஊறு எனப்படும். பிக்குகளே! வாயில் (ஆறு வகைப்புலன்) என்பது என்ன? கண், செவி, நாசி, நா, உடல், மனம் ஆகிய புலன்களில் ஒவ்வொன்றும் (வாயிலாம்) - இது வாயில் (ஆறு வகைப் புலன்) எனப்படும். பிக்குகளே! அருவுரு என்பது என்ன? உணர்வு, பகுத்தறிதல், தீர்மானித்தல், வெளித்தொடர்பு கொள்ளல் ஆகிய மனநிகழ்ச்சிகள் அருவம் எனப்படும். நால்வகைப் பூதங்களும், அவைகளை ஆதாரமாய்க் கொண்ட உடலும் உருவம் எனப்படும். அருவமும், உருவமும் இத்தகையது. (இவை இரண்டும் சேர்ந்த) இது அருவுரு எனப்படும். பிக்குகளே உணர்ச்சி என்பது என்ன? உணர்ச்சி ஆறு தொகுதிகளாயுள்ளது: கண், செவி, நாசி, நா, உடல், மனம் ஆகிய ஒவ்வொன்றின் சம்பந்தத்தினாலும் ஏற்படும் உணர்ச்சி. இது உணர்ச்சி எனப்படும். செய்கைகள் என்பவை யாவை? செய்கைகள் மூன்று வகை உடலின் செய்கை, வாக்கின் செய்கை, மனத்தின் செய்கை- இவை செய்கைகள் எனப்படும். செய்கைகள் என்பவை யாவை? செய்கைகள் மூன்று வகை: உடலின் செய்கை, வாக்கின் செய்கை, மனத்தின் செய்கை, இவை செய்கைகள் எனப்படும். பேதைமை என்பது என்ன? துக்கத்தைப் பற்றியும், துக்கம் தோன்றுவதைப் பற்றியும், துக்கத்தை நீக்குதல் பற்றியும், துக்கத்தை நீக்கும் மார்க்கத்தைப் பற்றியும் அறியாதிருத்தல். இது பேதைமை எனப்படும். ஆகவே, பிக்குகளே, செய்கைகள் பேதைமையைச் சார்புகொண்டு ஏற்படுகின்றன, உணர்ச்சி செய்கைகளைச் சார்புகொண்டு ஏற்படுகின்றன, இவ்வாறே மற்றவைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறு தோன்றுகின்றது துக்கம் அனைத்தும். 84 புத்தரின் போதனைகள்