பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உருவையும், உணர்ச்சியையும், சிந்தனா சக்தியையும், (நன்மை தீமைகளை) அறியும் ஆற்றலையும் பெற்றிருக்கிறான். நான் இருக்கிறேன்' என்று 'மக்கள் கூறும்போது குறிப்பிடும் ஆணவம் கந்தங்களுக்குப் பின்னால் தங்கி நிற்கும் தனிப்பொருள் அன்று. மனம் உளது; உணர்ச்சியும் சிந்தனையும் உள, உண்மையும் உளது; நீதியான வழியில் மனம் செல்லும்போது அதுவே உண்மையாகும். மனிதனின் சிந்தனையைத் தவிர, அதற்குப் புறம்பாக 'நான்' என்று கருதத்தக்க தனியான ஆன்மா ஒன்று இல்லை. ஆணவம் தனித்தன்மையுடன் நிலையாயுள்ளது என்று நம்புகிறவன் பொருள்களின் உண்மை நிலையை உணராதவனாவான். ஆன்மாவைத் தேடி அலைவதே தவறு; அந்த ஆரம்பமே தவறாயுள்ளது. அது தவறான திசையிலேயே கொண்டு செலுத்தும்.' Mr W. சத்தியத்தின் முன்னிலையில் தான் என்னும் தனித்தன்மை அழிந்து, ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமையைப் பற்றியே கருத்துக் கொண்டும், அதை நிறைவேற்றும் ஆசை ஒன்றையே கொண்டும் விளங்கினால், அவனுக்கு முக்தி நிச்சயம். '

  • + (தான் தனியான ஆன்மா என்று கருதும்) ஆணவம் ஒரு ஜூரம்; அது நிலையற்ற ஒரு காட்சி, ஒரு கனவு. ஆனால் உண்மை புனிதமானது, ஆழமுள்ளது, நிலையானது, தருமத்தின் மூலமே நித்திய வாழ்வு பெறலாம். தருமமே என்றும் உள்ளது. *

+ or ஒருவன் தன் ஆணவத்தின் உண்மையையும், தன் புலன்களின் போக்கையும் உணர்ந்துகொண்டால், நான்' என்பதற்கு இடமில்லை என்று தெரிந்து கொள்வான்; அதன்மூலம் அவன் நிலையான சாந்தியைப் பெறுவான். உலகம் 'நான்' என்ற எண்ணத்தைப் பற்றிக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து தவறான காட்சியே தோன்றுகின்றது."

பேதைமையாலும், மயக்கத்தாலுமே மனிதர்கள் தங்கள் ஆன்மாக்கள் தனித்தனியானவை என்றும், (எவ்விதச் சார்புகளுமில்லாது, சுயமாக) நித்தியமாயுள்ளவை என்றும் கனவு காண்கிறார்கள். ' + or பேதை தன் தனி ஆன்மா என்ற கருத்தை மேற்கொள்கிறான்; ஆனால் ஞானி அதற்கு ஆதாரமில்லை என்று காண்கிறான். இதனால் அவன் உலகைப் பற்றிய சரியான கருத்தைப் பெறுகிறான் துக்கத்தால் ஒன்றுசேர்க்கப்பெற்றவை யாவும் மீண்டும் அழிவுறும் என்றும், உண்மை ஒன்றே நிலைத்திருக்கும் என்றும் அவன் சரியாக முடிவு செய்கிறான். ' ப. ராமஸ்வாமி | 87