பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


43. நிருவானம் 'இது நான் என்ற கருதாமையே விடுதலை. Tor Tor 'நான் இருக்கிறேன் என்ற எண்ணத்தை அழித்துவிட்டபொழுது பிக்கு தீயிலிருந்து வெளியேறுகிறான்."

  • + உண்மையிலே, இராதா, ஆசையை அழித்தலே நிருவாணம். '

++ II விடுதலை என்பதன் பொருள் நிருவானம்.

  • +

I பிறப்பை அறுத்து முடிவு காண்பது நிருவாணம். Hk yr காமம், குரோதம், மயக்கம் ஆகியவற்றை அழித்தலே (கந்தங்களின்)சேர்க்கையில்லாத நிலை (நிருவாணம்) | Er AT (நிருவானத்தைப் பற்றி அருகத்து பெற்றுள்ள) விஞ்ஞானம் என்ற கட்புலனாகாத, எல்லையற்ற அறிவு நிலையே அது எந்தத் திசையிலிருந்தும் சென்று கரையேறக்கூடிய நிலையே அது."

பிறரைச்சார்ந்து நிற்பவனிடம் சலனம் (உறுதியின்மை) இருக்கின்றது. சுதந்திரமாக உள்ளவனிடம் சலனமில்லை. சலனம் எங்கேயில்லையோ, அங்கே அமைதி உண்டு. அமைதி எங்கே உளதோ, அங்கே (மோகம் முதலிய வெறிகள் சம்பந்தமான) இன்பம் துய்க்கும் களியாட்டமில்லை. இன்ப வேட்டை எங்கே யில்லையோ, அங்கே (பிறப்பு இறப்பாகிய) வருதலும் போதலும் இல்லை. வருதலும்போதலும் எங்கேயில்லையோ, அங்கே ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதலும் இல்லை. ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல் எங்கேயில்லையோ, அங்கே "இங்கு என்பதில்லை. அப்பால் என்பதில்லை. இங்கும் அங்கும். என்பதுமில்லை. அதுவே துக்கத்தின் முடிவு. " † To

  • - ஒரு சீடன். * அது என்பது நீர், நிலம், நெருப்பு, ஜடப்பொருள். மனம், உடல் முதலிய எதுவும் இல்லாத இடம் எது என்பதற்குப் பதிலாகக் கூறப்பட்டுள்ளது.

92 | புத்தரின் போதனைகள்