பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 புத்தர் போதனைகள் தன்மையுடன் நிலையுள்ளது என்று நம்புகிறவன் பொருள்களின் உண்மை நிலையை உணராதவனா வான். ஆன்மாவைத் தேடி அலைவதே தவறு; அந்த ஆரம்பமே தவறாயுள்ளது, அது தவறான திசை யிலேயே கொண்டு செலுத்தும்." 串 சத்தியத்தின் முன்னிலையில் தான் என்னும் தனித் தன்மை அழிந்து, ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமையைப் பற்றியே கருத்துக் கொண்டும், அதை நிறைவேற்றும் ஆசை ஒன்றையே கொண்டும் விளங் கினால், அவனுக்கு முக்தி கிச்சயம்.: 贵 (தான் தனியான ஆன்மா என்று கருதும்) ஆணவம் ஒரு ஜூரம்; அது நிலையற்ற ஒரு காட்சி, ஒரு கனவு; ஆனால் உண்மை புனிதமானது. ஆழ முள்ளது, நிலையானது. தருமத்தின் மூலமே கித்திய வாழ்வு பெறலாம். தருமமே என்றும் உள்ளது."

ஒருவன் தன் ஆணவத்தின் உண்மையையும், தன் புலன்களின் போக்கையும் உணர்ந்துகொண்டால், "கான்' என்பதற்கு இடமில்லை என்று தெரிந்து கொள்வான்; அதன் மூலம் அவன் நிலையான சாக்தி யைப் பெறுவான். உலகம் 'நான்' என்ற எண்ணத் தைப் பற்றிக்கொண்டிருக்கின்றது, அதிலிருந்து தவறான காட்சியே தோன்றுகின்றது."