பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 புத்தர் போதனைகள் பிறரைச் சார்ந்து நிற்பவனிடம் சலனம் (உறுதி யின்மை) இருக்கின்றது. சுதந்திரமாக உள்ளவனிடம் சலனமில்லை. சலனம் எங்கே யில்லையோ, அங்கே அமைதி உண்டு. அமைதி எங்கே உளதோ, அங்கே (மோகம் முதலிய வெறிகள் சம்பந்தமான) இன்பம் துய்க்கும் களியாட்டமில்லை. இன்ப வேட்கை எங்கே யில்லையோ, அங்கே (பிறப்பு இறப்பாகிய) வருதலும் போதலும் இல்லை. வருதலும் போதலும் எங்கே யில்லையோ, அங்கே ஒரு நிலையிலிருந்து மற்றொன் றுக்கு மாறுதலும் இல்லை. ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல் எங்கேயில்லையோ, அங்கே "இங்கு' என்பதில்லை, அப்பால்' என்பதில்லை, "இங்கும்-அங்கும்' என்பதுமில்லை. அதுவே துக்கத் தின் முடிவு. +) புறத் தோற்றங்களான யாவும் ஒழிந்த பிறகுதான் ஒரே உயிர்த் தத்துவம் மட்டும் எஞ்சி நிற்கின்றது; அது பிரபஞ்ச இயல்புகளுக்கு அப்பாற்பட்டுச் சுதந்திர மாயுள்ளது. விறகு தீர்ந்த பிறகும், சுடர் அனைந்த் பிறகும், கித்தியமான ஒளியில் எரிந்து கொண்டிருக் கும் தி அதுதான்; ஏனெனில் அந்தத் தி சுடரிலுமில்லை, விறகிலுமில்லை, அந்த இரண்டின் உட்புறத்திலு மில்லை; ஆனால் மேலேயும், கீழேயும், எங்கும் هـهir ளது அது." - - கிலமும் ருேம் இல்லாத, ஒளியும் காற்றும் இல் லாத, எல்லையற்ற ஆகாயமும் (இடமும்) பிரக்ஞை லாத, அறிதலும் அறிதலற்றதும் இல்லாத, இந்: