பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 29 செய்யும் தியானம் மூன்றாவது; பரிசுத்தமான பூரண சாந்தி நிறைந்த நிலையில் மனம் இன்ப-துன்பங் களுக்கு மேலாக எழுந்து கிற்கும்படி செய்யும் தியானம் கான்காவது. முதல் தியானம்: இதிலே, பிக்கு, புலனாசைகளை விட்டு ஒதுங்கி, தீய நிலைகளை விட்டு ஒதுங்கி, முதல் தியானத்தில் பிரவேசிக்கிறார். ஏகாக்ரகமான நிலைத்த சிந்தனையுடன் இருக்கிறார். இரண்டாம் தியானம்: பிறகு ஏகாக்ரகமான நிலைத்த சிந்தனையையும் உள்ளடக்கி, அவர் இரண்டாம் தியானத்தில் பிரவேசிக்கிறார்; இதில் உள்ளமைதியும் உள்ள உறுதியும் அதிகரிக்கின்றன. மூன்றாம் தியானம்: எழுச்சியை அடக்கிக் கொண்டு, உபேட்சா பாவனையோடு, பிக்கு, கருத் தோடும், தன்னடக்கத்தோடும் இருப்பது மூன்றாம் தியானம்; அவர் உடலோடு இருக்கும் போதே ஆனந்த நிலையை அநுபவிக்கிறார். இங்கிலையை ஆரியர்கள்* "சமதத்துவமடைந்தவர்களின் ஆனந்தம்' எ ன் று சொல்வார்கள். நான்காம் தியானம்: முன்னால் பெற்றிருந்த இன்பத்தையும் துன்பத்தையும் துறந்து, அவர் கான் காவது தியானத்தில் பிரவேசிக்கிறார்; இதில் இன்ப துன்ப உணர்ச்சிகள் நீங்கியிருக்கும், பரிசுத்தமான சமதத்துவ நிலை ஏற்பட்டிருக்கும்." 带

  • ஆரியர்கள் மேலோர்கள்.