பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் .33 அறிவாளி, மடிமையில் ஆழ்ந்தவர் நடுவே முயற்சியுடையோனாகவும், உறங்குவோர் கடுவே விழிப்புள்ளவனாகவும் இருப்பான்; பந்தயக் குதிரை வாடகைக் குதிரையைப் பிந்த விட்டுவிட்டு முன்னேறிப் பாய்வது போல், அவன் மற்ற யாவர்க்கும் முன்னால் செல்கிறான். : சிரத்தையின்றிச் செய்யும் காரியமும், ஒழுங்காகக் கடைப்பிடியாத விரதமும், மனமாரப் பேணாத பிரம சரியமும் பெரும் பயனை அளிக்கமாட்டா' 플품 (இராஜ்யத்தின்) எல்லைப்புறத்தில் இருக்கும் ககரத்தை உள்ளும் வெளியும் அரண் செய்து காப்பது போல், ஒருவன் தன்னைக் காத்துக் கொள்க. கண நேரத்தையும் வீணாக்க வேண்டாம், ஒவ்வொரு நிமிஷத்தையும் கல்வழியிலே பயன்படுத்தாமல் நிமிஷங் களை வீணாகக் கழித்தவர்கள் கிரயத்தில் விழும் போது வருந்துவர்." - * கருத்தில்லாமல் இருக்கவேண்டாம், மனத்தின் சிந்தனைகளை அடக்கிக் காக்கவும். சேற்றில் விழுந்த யானையைக் கரையேற்றுவது போலத் தீய வழி யிலிருந்து உன்னை மீட்டுக் கொள்க. 를 --===--

  • நிரயம்-நரகம் புத்-3