பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 புத்தர் போதனைகள் பிக்குகளே! பிக்கு கருத்தோடும், தன்னடக்கத் தோடும் இருந்துவருவாராக. இதுவே உங்களுக்கு நான் செய்யும் உபதேசம். பிக்குகளே, ஒரு பிக்கு கருத் தோடிருப்பது எப்படி? பிக்கு, உடல் (கந்தங்களின்)* கலப்பு என்பதை உணர்ந்து, ஊக்கத்தோடும், அமைதியோடும், கருத் தோடும், உலகிலுள்ள ஆசையையும் அதிருப்தியையும் அடக்கிக்கொண்டும் இருப்பார். இதுதான் ஒரு பிக்கு கருத்தோடு இருத்தல். பிக்குகளே! ஒரு பிக்கு தன்னடக்கத்தோடு இருத் தல் எங்ங்னம்? பிக்குகளே! பிக்கு வெளியே செல்லும்போது இருப் பிடத்திற்குத் திரும்பும் போதும், அடக்கமாக கடந்து கொள்வார். முன்னால் கோக்குவதிலும், பின்புறம் கோக்குவதிலும் அவர் அமைதியோடு கடப்பார். (உடலையோ, கைகளையோ) வளைப்பதிலும் நீட்டு வதிலும், அவர் அமைதியோடிருப்பார். தம் உடைகளை அணிவதிலும், திருவோட்டை ஏ க் து வ தி லு ம் , உண்ணல், பருகல், சுவைத்தல், விழுங்குதல், உடலின் உபாதைகளைக் கழித்தல், கடத்தல், கிற்றல், அமர்தல், உறங்கல், விழித்தல், பேசுதல், மெளனமாயிருத்தல் ஆகிய எல்லாவற்றிலும் அவர் அமைதியோடிப்பார். பிக்குகளே, இதுவே பிக்கு தன்னடக்கத்தோடு இருத்த லாகும்." S TSTSTS TTSTSTTSTSTTSTSTTSTT TTTTS TT STSTSTS TTTTTTS கந்தங்கள் ஐந்து: உருவம் (ரூபஸ்கந்தம்), நுகர்ச்சி (வேதனா ஸ்கந்தம்), குறி (ஸம்ஜ்ஞா ஸ்கந்தம்), பாவனை (ஸம்ஸ்கார ஸ்கந்தம்), உணர்வு (விஞ்ஞான ஸ்கந்தம்).