பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 39 உடலின் பாவங்கள் கொலை, களவு, வியபசாரம்; நாவின் பாவங்கள் பொய்மை, புறங்கூறல், கிந்தனை, பயனற்றபேச்சு; உள்ளத்தின் பாவங்கள் பொறாமை, துவேஷம், தவறு (உண்மையை உள்ளவாறு உண ராமை). ஆதலால் உங்களுக்குக் கீழ்க்கண்ட விதிகளை அளிக்கிறேன்: 1. கொல்லவேண்டம், உயிரைப் பேணுங்கள். 2. திருடவேண்டாம், பறிக்கவும் வேண்டாம்; ஒவ்வொருவரும் தமது உழைப்பின் பயனைத் துய்ப்ப தற்கு உதவி செய்யுங்கள். 3. தீயொழுக்கத்தை (வியபசாரத்தை) விலக்குங் கள்; கற்பு கெறியில் வாழ்க்கையை கடத்துங்கள். 4. பொய் பேச வேண்டாம்; தக்க முறையில், பயமில்லாமலும், அன்பு கனிந்த உள்ளத்துடனும், உண்மையைப் பேசுங்கள். 5. பிறரைப் பழிக்கின்ற செய்திகளைக் கற்பனை செய்யவேண்டாம். அவைகளைப் பரப்பவும் வேண் டாம். கூட வாழும் மக்களைப் பற்றிக் குறை கூற வேண்டாம். அவர்களுடைய நற்குணங்களைப் பாராட்டுங்கள்; அவர்களுடைய பகைவர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கத் தக்க முறையில் கடந்து கொள்ளுங்கள். 6. ஆணையிட்டுப் பேசவேண்டாம், நாகரிக மாகவும், கயம்படவும் பேசவும்.