பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. ஆலவங்கள்" வையகமெல்லாம் ஒரு குடைக் கீழ் ஆண்டாலும், இன்னும் கடலுக்கு அப்பால் கண்டம் எதுவும் இருக் கிறதா என்று ஆசை கொள்ளல் இயல்பு. ஆசைக்கு ஒர் அளவில்லை. கடல் முழுதும் நீர் நிறைந்திருப்பினும், அதற்கு அமைதியில்லை. அதுபோல், எத்தனை எத்தனை இன்பங்கள் இருப்பினும்,மனிதக் குலத்திற்கு தெவிட்டுதல் இல்லை!" - உலக வாழ்வாகிய பெரிய விஷ விருட்சத்திற்கு வேராக அமைந்துள்ளது பேதைமை......"

பிக்குகளே! எல்லாப் பொருள்களும் அனல்பற்றி எரிகின்றன. பிக்குகளே, பற்றி எரியும் இந்தப் பொருள் கள் யாவை? பிக்குகளே! கண் பற்றி எரிகின்றது; உருவங்கள் எரிகின்றன; கட்புலனும் எரிகின்றது: கண்ணால் பார்த்த பொருள்களின் கருத்துக்களும் எரிகின்றன; புலன்களின் மூலம் உணரும் கல்லன, தீயன, அல்லா தன ஆகிய எல்லா உணர்வுகளும் எரிகின்றன. எதைப் பற்றிக்கொண்டு இவைகள் எரிகின்றன?

  • ஆஸ்வங்கள் நான்கு: காமாஸ்வம், பாவாஸ்வம், திட்டாலவம், அவிஜ்ஜாஸ்வம். காமாளவம்-சிற்றின்பத் தேட்டம்: பாவாஸ்வம்-பிறப்புக்குக் காரணமான உயி ராசை, திட்டாஸ்வம்-கற்பனையான பொய்க் காட்சி; அவிஜ்ஜாஸ்வம்-அறியாமை, :