பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 புத்தர் போதனைகள் ஆசைத் தீயிலும், துவேஷத் தீயிலும், வெறி கொண்ட பற்றுத் தியிலும், ஜனனம், முதுமை, மரணம், துக்கம், புலம்பல், துயரம், சோகம், அவ கம்பிக்கை ஆகியவற்றால் தோன்றும் தீயிலும் எரிகின்றன. ஆசாபாசங்கள், வெகுளி, பேதைமை, வெறுப்பு முதலியவை இருக்கும்வரை-கெருப்பு தான் பற்றி எரிவதற்குரிய பொருள்கள் இருக்கும்வரை-தி எரிந்து கொண்டே யிருக்கும். அதனால் ஜனன மரணங்களும் அவைகளைச் சார்ந்த துயரங்களும் நேர்ந்துகொண்டே யிருக்கும்."

'கான் என்னும் அகங்காரத்திற்கு அடிமைகளாகிக் காலையிலிருந்து இரவு வரை அதற்கே ஊழியம் செய்து கொண்டிருப்பவர்களே! பிறப்பு, முதுமை, பிணி, மரணம் ஆகியவற்றைப் பற்றி ஓயாது அச்சம் கொண்டவர்களே! நான் ' என்ற கொடிய தலைவன் இல்லை )ז65זה ,mp நற்செய்தியைக் கூறுகிறேன். கேண்மின்1 'கான்' என்பது ஒரு தவறு, ஒரு மயக்கம், ஒரு கனவு கண்களைத் திறந்து விழித்து எழுங்கள். விஷயங்களை உள்ளபடியே பாருங்கள். உங்களுக்குச் சாந்தி ஏற்படும்." மரம் தீப்பற்றி எரியும்போது புள்ளினங்கள் அதன் மீது குடியிருக்க முடியுமா? ஆசைகளால் ஏற்படும் சித்த விகாரமுள்ள இடத்திலே சத்தியம் தங்கி யிருக்க முடியாது. இதை அறியாத கல்விமானைப்