பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 89 பிக்குகளே! துறவு வாழ்க்கையின் முக்கிய அம்சங் கள் பயன்களில் இல்லை, புகழிலும் கெளரவத்திலும் இல்லை; சீலங்களை முறையாகப் போற்றி வருவதில் இல்லை; அறிவும் உள்ளொளியும் பெறுவதிலும் இல்லை; ஆனால் துறவு வாழ்க்கையின் சாரம் என்பது நிச்சயமான இதய விடுதலையிலேயே உள்ளதுஅதுவே குறிக்கோள்.' எனது தருமம் பரிசுத்தமானது, மேலோர் தாழ்ந் தோர் என்றும், செல்வர் ஏழைகள் என்றும் அதற்கு வேற்றுமையில்லை. தண்ணிரைப் போல எனது தருமம் எல்லோரையும் வேற்றுமையின் றிச் சுத்தம் செய்வது. நெருப்பு ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையிலே யுள்ள சகல பொருள்களையும் பாகுபாடின் றி எரிப்பது போல, எனது தருமமும் உயர்வு தாழ்வு என்ற வேற்றுமையற்றது. எனது தருமம் ஆகாயத்தைப் போன்றது; அதில் அவ்வளவு விசாலமான இடமிருக்கின்றது. எல்லோரை யும் ஆடவர், பெண்டிர், சிறுவர், சிறுமியர், வல்லமை யுள்ளவர், மெலிந்தவர் யாவரையும் ஏற்றுக் கொள்ள இடமிருக்கின்றது."