பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. சண்டாளர்கள் சாம்பலுக்கும் பொன் னுக்கும் குறிக்கத்தகுந்த வேற்றுமை உண்டு; ஆனால் ஒரு பிராமணனுக்கும் சண்டாளனுக்கும் அத்தகைய வேற்றுமை எதுவு மில்லை. காய்ந்த கட்டையைக் கடைவதில் எழும் தியைப்போல் பிராமணன் உண்டாக்கப் பெறவில்லை; அவன் வானத்திலிருந்து இறங்கி வரவில்லை, காற்றி லிருந்து தோன்ற வில்லை, பூமியைத் துளைத்துக் கொண்டு மேல் வரவில்லை. சண்டாளன் எவ்வாறு, தோன்றினானோ, அதுபோலவே பிராமணனும் ஒரு ஸ்திரியின் கருப்பையிலிருந்து பெறப்பட்டவனே யாவான். எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியான அங்கங்களைப் பெற்றிருக்கின்றனர், எள்ளளவு வித்தி யாசமும் இல்லை. அவர்களை வெவ்வேறு வர்க்கங் கள் என்று எப்படிப் பிரித்துக் கருத முடியும்? மனித குலத்திலே எத்தகைய குறிப்பிட்ட வேற்றுமையும் உளது என்று கருதுவதை இயற்கை மறுத்துக் காட்டுகின்றது. 事 கோபமுள்ளவனும் துவேஷ முள்ளவனுமான மனிதனே சண்டாளன்; தீயவனாயும், ஏமாற்றுபவனா யும், தவறு செய்பவனாயும், கரவடம் நிறைந்தவனா யும் இருப்பவனே சண்டாளன். எவன் கோபமூட்டுபவனாயும், பேராசையுள்ள வனாயும, பாவகரமான ஆசைகளுள்ளவனாயும், பொறாமை, அயோக்கியதை, வெட்கமின்மை, பாவங் கள் செய்வதில் பயமின்மை ஆகியவற்றோடு விளங்கு பவனாயும் இருக்கின்றானோ, அவனையே சண்டாளன் என்று அறியவும்.