பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 103 பிறப்பினால் ஒருவன் சண்டாளனாவதில்லை; பிறப்பினால் ஒருவன் பிராமணனாவதுமில்லை; செயல் களினாலேயே ஒருவன் சண்டாளனாகிறான், செயல் களினாலேயே ஒருவன் பிராமணனாகிறான். ! 桦 உயிர்களுக்குத் ததாகதர் (புத்தர்) போதனை செய்கையில், பாரபட்சம் காட்டுவதே யில்லை. சூரியனும்சந்திரனும், கல்லவர் தீயவர் என்றோ, உயர்ந் தோர் தாழ்ந்தோர் என்றோ, மணமுள்ளவர் மனமற்ற வர் என்றோ வேற்றுமை பாராமல், உலகம் முழுவதற் கும் ஒளி செய்வது போலவும், அவைகளின் கதிர்கள் பாரபட்சமின்றி எல்லாப் பொருள்களின் மீதும் பரவுதல் போலவும், ததாகதர் போதிக்கும் அறிவொளி உயிர்கள் அனைத்திற்கும் சமமாகவே வருகின்றது. --