பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு மாத முற்றுகையில் அவரும் முஸ்லிம்களும் பலநாள் உணவின்றித் துயருற வேண்டியிருந்தது. முடிவில் யோருக்கு வந்தவர்களிடையே பிணக்குகள் விளைந்து, முதலில் 4தர்களும் அடுத்தாற்போல் குறைவியரும், பின்னர் மற்றையோரும் முற்றுகையைக் கைவி. டுப் போய்விட்டனர். இதன் பின்னும் யூதர்களின் தொல்லை பொறுக்க முடியாமல், நாயகம், அவர்கள் கோட்டை கொத்தளங்களோடு செழிப்புடன் வசித்து வந்த கைபர் பிரதேசத்திற்குச் சென்று போராடி வென்றார். இதனால் யூதர்களின் வலிமை முறிந்தது. இதன்பின்பு மக்கா மீது படையெடுப்பு நடந்தது. அதிலும் முகம்மது வெற்றி பெற்று, கஅபாவிலிருந்த 360 விக்கிரங்களையும் சி-கிடைத்தெறிந்து விட்டு, மக் கத்து மக்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தை உபதேசித்தார். கி.அ.ப 11 தொன்றுதொட்டே அரபி மக்களின் வணக்கத்தலம். அதையே எல்லா முஸ்லிம்களும் முதன்மையான வணக்கத் தலமாகக் கொள்ள வேண்டுமென்றும், அவர்கள் எங்கேயிருந்தாலும் கஅபா இருக்கும் திசை நோக்கியே வனங்க வேண்டுமென்றும் நாயகம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ஹிஜிரி இரண்டாவது வருடத்தில்-ஏற்பாடு செய்திருந்தார். மக்காவின் வீழ்ச்சிக்குப் பின்னும் சில அடி வகுப்பினர் முஸ்லிம்களை எதிர்க்கத் திட்டம் வகுத்துக்கொண்டிருந்தனர். நாயகம் 15,000 வீரர்களுடன் ஹானைன் பள்ளத்தாக்கில் அவர்களை (Aறியடித்தார். இவ்வாறு தற்காப்புக்காகவும், முன்னெச்சரிக்கைக்காகவும், இஸ்லாத்தின் இளமைப் பருவத்திலேயே முஸ்லிம்கள் போராட நேர்ந்தது. நாயகம் போர்களைத் தலைமை வகித்து நடத்தியதோடு யுத்த தருமம் பற்றிய புதிய நீதிகளையும் எதிரிகளுக்கும் தம் இனத்தாருக்கும் கற்பித்தார். அவசியம் நேரும்போது இஸ்லாத்தின் பாதுகாப்புக்காக முஸ்லிம்கள் 'ஜிஹாத்' என்னும் அறப்போர் புரிவது கடமை.ெ பன்றும் போதித்தார். முஸ்லிம்கள் போர்களில் அடைந்த வெற்றிகளால் அரபி நாட்டில் எதிர்ப்பில்லாமற் போகவே, இஸ்லாம் மிக வரைவில் வளர்ந்து பெருக ஆரம்பித்தது. அத்துடன் நாடு முழுவதற்கும், அ ட்ரசியல், பொருளாதார முறைகளிலும் நாயகடே. வழி காட்டும் பொறுப்பும் ஏற படடது. தனி மனிதருடைய சமய வாழ்க்கைக்காக மட்டும் இஸ்லாம் ஏற்படவில்லை. மனிதர்கள் ஒருவரோடொருவர் பழகுவதற்கும், பல வகுப்பினர்கள் சேர்ந்து வாழ்வதற்கும், ெ பாதுவாகச் சமுதாய வாழ்க்கை அனைத்திற்கு: அதில் விதிகள் இருக்கின்றன. சமய வாழ்க்கை வேறு, மற்ற உலக சம்பந்தமான இலெளகிக பி'ற்க்கை வேறு என்ற வே ற்றுமை அதிலில்லை. மானிட வாழ்க்கை சிேஜேதுமே சமய வாழ்க்கைதான். மனிதனுடைய செயல்கள் யாவும், ஒரே அடிப்படையில், ஒரே லட்சியத்தோடு நடைபெற வேண்டும். மனிதனை அரசியல் மனிதன், பொருளாதார மனிதன், சமய சம்பந்தமான மனிதன் என்று கூறிட்டுப்

108 ம புத்த ஞாயிறு