பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் ஆகியவை பற்றிய அவர் போதனையும், வேள்வி ஊனுணவு, சாதிப்பாகுபாடு முதலியவற்றை அவர் எதிர்த்ததும் வைதிகத்திற்கு முரண்பாடாகும். வேள்விக்குப் பதில் அமில பூஜை' என்று சொல்லப்படும் தரும பூஜையே சிறந்ததென்றும், பலிகளைப் பரிசாகக் கொடுத்துத் தெய்வங்களின் திருவருளைப் பதிலாகப் பெற எண்ணுவது தவறென்றும் அவர் போதித்தார். இவ்வளவு போதனைக்குமிடையில், வேதங்களை அவர் எவ்விடத்திலும் பழித்து இழித்துக் கூறவில்லை. 7ெளத்த சமய சம்பந்தமான பிடக நூல்களி ல், ஒரிடத்திலாவது வேதகண்டனம் இல்லை. ஊன் வேள்வி முற்காலத்தில் இல்லை யென்றும், பின்னால் பிராமணர் அதைத் தொடக்கி வைத்தனர் என்றும் 'சுத்த நிபாத நூலில் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: பகவர் சிராவஸ்தி நகரையடுத்த ஜேதவன ஆராமத்திலிருந்தபோது, ஒருசமயம் கோசல நாட்டுத் தணிகரான பல வயோதிகப் பிராமணர் அவரைத் தரிசிக்க வந்திருந்தனர். அப்போது பண்டைப் பிராமணருக்கும் பிற்காலப் பிராமணருக்குமுள்ள வேற்றுமைகள் பற்றி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் மறுமொழி கூறினார். முற்காலத்து வேதிய ரிவிகள் புலனடக்கம் பெற்று, அருந்தவத்தை மேற்கொண்டு, ஆடுமாடுகள், தானியங்கள் , பொன் முதலியவற்றை உடைமைகளாகக் கொள்ளாமல், தியானமே செல்வமாகப் பெற்று வாழ்ந்ததையும், நாற்பத்தெட்டு வருடம் அவர்கள் பிரமசரியத்தைக் கடைப்பிடித்து விவாகமான பிறகும் கனவிலும் போக விலாசங்களில், ஆழ்ந்துவிடாமல், உத்தம வாழ்க்கை வாழ்ந்ததையும், உயிர்க்கொலை செய்து யாகங்கள் இயற்றாமல், தமக்குப் பிறரளித்த தானியங்கள், உடைகள், எண்ணெய், வெண்ணை முதலியவைகளைக் கொண்டே யக்ஞங்கள் நடத்தித் தியாகிகளாகத் திகழ்ந்ததையும், அறமே அவர்களைப் பாதுகாத்து வந்ததையும் அவர் எடு,... ...,.,... பிற்கால வேதியர், செல்வத்திலும், போகங்களிலும் நாட்டமுற்றுப் பேராசைகொண்டு, தமது பண்டைப் பெருமையிலிருந்து வழுவி வந்ததையும், ஆயிரக்கணக்கில் பசுக்களை யாகங்களில் வதைத்தும் மன்னர்கள் மூலம் அசுவமேதம், புருவுமேதம், வாசபேயம் முதலியவற்றைச் செய்ய முற்பட்டதையும், அவர்களும் கூத்திரியர்களும் ஐம்புல இன்பங்களில் சிக்குண்டு சீர்கெட்டதையும் அவர் விளக்கி யுரைத்தார். வேதியரிடம் அண்னலுக்கு வெறுப்பில்லை, பகையுமில்லை. உலகில் தீயொழுக்கத்தைக் காட்டிலும் அறியாமையே பல பாவங்களுக்கும் காரணம் என்று அவர் கருதியதால், தமது கருணை மார்க்கத்தை யாவர்க்கும் உபதேசிக்கச் செய்ததோடு முக்கியமாகப் பிரானமர்களுக்கும் உபதேசிக்கும்படி அவர் பிக்குகளுக்கு ஆணையிட்டு

  • பிடக நூல்கள் மூன்று - திரிபிடகம், பிடகம் - கூடை

18 ம புத்த ஞாயிறு