பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் வேதங்களும் வைதிக சமயங்களும் 'ஒன்றே என்னின் ஒன்றேயாம், பலஎன்(று) உரைக்கின் பலவேயாம். அன்றே என்னின் அன்றேயாம், ஆம்என்(று) உரைக் கின் ஆமேயாம். இன்றே என்னின் இன்றேயாம், உள(து) என்(று) உரைக்கின் உளதேயாம். நன்றே நம்பி குடிவாழ்க்கை, நமக்(கு) இங்(கு) என்னோ பிழைப்பம்மா!' - கம்பர் மக்கள் யாவரும் வாழ்வில் இன்பமே விழைகின்றனர். ஒவ்வொருவரும் இன்பத்தை நாடியே செல்கின்றனர். ஆனால் எந்தப் பொருள்களில் ஆசை யுண்டாயிற்றோ, அவை கிடைத்த பின்பு, அவற்றில் தெவிட்டுதல் ஏற்படுகின்றது, வெறுப்பு விளைகின்றது. இன்பங்கள் சிறிது சிறிதாகக் கூடி வருகையில், துன்பங்கள் பலவாறாகப் பெருகி விடுகின்றன. பிறந்தது முதல் இன்பத்தையே தேடியலை யினும் , அது 37