பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.மு. 1,000 (சுமார்) ஜாரதுவுடிரர் (பாரசீகம் என்ற ஈரான் நாடு) கி.மு. 573 கெளதம புத்தர் (இந்தியா) கி.மு. 570 லாவோத்ஸ்ே (சீனா) கி.மு. 551 கன்பூஷஸ் (சீனா) கி.மு. 1 ஏசுகிறிஸ்து (பாலஸ்தீனம்) கி.பி. 632 முகமது நபி (அரேபியா) வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு நாடுகளில் தோன்றிய இப்பெரியார்களில் ஒவ்வொருவரும் அவரவர் சமுதாயத்திற்குப் போதித்து வந்த அறமுறைகள் ஒவ்வொரு சமயம் ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தன. இவர்களைப் பற்றியும், இவர்களுடைய சமயங்களைப் பற்றியும், சுருக்கமாக ஒரளவாவது அறிந்து கொண்டால், சமயங்களை நிறுவிய சான்றோர்களில் புத்தரின் ஸ்தானத்தை நன்கு தெரிந்து கொள்ளமுடியும். பெளத்த தரும ஆராய்ச்சிக்கும் பிற சமயங்களைப் பற்றிய கருத்து மிக்க உதவியாகும். இந்த இயலில் முதல் நான்கு தீர்க்க தரிசிகளைப் பற்றக் கவனிப்போம். ஜாரதுவிடிரர் ஜாரதுஷ்டிரர் ஈரான் நாட்டு ஆரிய மக்களிடையே அவதரித்தவர். இந்தியாவுக்கு வந்த ஆரியரும் அவ்வாரிய இனத்தைச்சேர்ந்தவரே யாதலால், இரு பிரிவினருடைய பழக்க வழக்கங்கள், வழிபாடுகள், முதலியவை ஒன்று போலவே இருந்தன. ஜாரதுஷ்டிரர், ஜாரதுஷ்டிரர்’ சமயத்தை ஸ்தாபித்தவர். பின்னால், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆசிய கண்டத்தில் அலை மோதிய சமயப் புரட்சியின் திலகங்களாக மூவர் தோன்றினர். இந்தியாவில் கெளதம புத்தர் பெளத்த சமயத்தையும், சீனாவில் லாவோத்ஸே டாவோ மதத்தையும், கன்பூஷஸ் கன்பூவிய மதத்தையும் நிறுவினார்கள். இம்மூவரும் ஒரே காலத்தில் இருந்திருக்க வேண்டுமென்று சரிததிர ஆசிரியர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். இவர்களுக்கு ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னால் ஏசுநாதர் பாலஸ்தீன நாட்டு யூதரிடையே தோன்றிக் கிறிஸ்தவ சமயத்தை அமைத்தார். அவருக்கு ஆறு நூற்றாண்டுகட்குப் பின்னால் பாலைவனங்கள் மிகுந்த அரேபிய தேசத்தில் முகம்மது நபி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்படுத்தினார். ஜாரதுண்டிரரைப் பற்றி ஆதாரமுள்ள சரித்திர வரலாறு இல்லாததால் அவர் பிறந்த ஆண்டே சரியாகத் தெரியவில்லை. அதைக்

  • இது செளராஷ்டித மதம் என்று சாதாரணமாகச் சொல்லப்பெறுவது.

52 0 புத்த ஞாயிறு