பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுகர்ச்சி மீள வேட்கை மீளும், வேட்கை மீளப் பற்று மீளும், பற்று மீளக் கருமத் தொகுதி மீளும், கருமத்தொகுதி மீளத் தோற்ற(ம்) மீளும்,தோற்ற(ம்)மீளப் பிறப்பு மீளும், பிறப்புப் பிணி முப்புச் சாக்கா(டு) அவல(ம்) அரற்றுக்கவலை கையா(று) என்றிக் கடையி(ன்) துன்பம் எல்லா(ம்) மீளு(ம்) இவ்வகையான் மீட்சி அவா அல்லது ஆசையை முற்றுங் களைந்து துறந்துவிட்டால், பேதைமை போகும்; பேதைமை போனால் செய்கை போகும். இவ்வாறே ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக, மற்றச் சார்புகளும் கெட்டொழிந்து, வினைப் பயனாக வரும் பிணி, மூப்பு, சாக்காடுகளும் நீங்கும். ஆகவே மீட்சிக்கு வழி அவா (திருஷனை) என்பதை அறவே அழித்தல். உலக வாழ்க்கை துக்கம்: துக்க உற்பத்தி பிறப்பினாலும், பன்னிரண்டு நிதானங்களாலும் ஏற்படுகிறது:துக்க நோயை நீக்குவதற்கு அவா அல்லது ஆசையை வேரோடு நீக்க வேண்டும் என்ற விஷயங்களை மேலே பார்த்தோம். ஆசையை நீக்குவதற்கு வழி அல்லது மார்க்கம் எது? அஷ்டாங்க மார்க்கம் என்ற எட்டு அங்கங்களுடைய வழியைப் புத்தர் காட்டியுள்ளார். அந்த எட்டு அங்கங்களையும் முறையாக நிறைவேற்றிச் சென்றால் துக்கம் நீங்கி, மீட்சி, வீடு, விடுதலை, விமுக்தி, மோட்சம், பேரின்பம் என்று பல பெயர்களால் கூறப்படும் திருவானத்தை அடையலாம். பெளத்த தருமப் பயிற்சிக்கு இந்த அள் எங்க மார்க்கமே அடிப்படை. நற்காட்சி, நல்லுாற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வா: . நல்லுக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி ஆகிய எட்டு உறுப்புக்களே அஷ்டாங்க மார்க்கம்" 责 மணிமேகலை

  • † நற்காட்சி: துக்கம் முதலிய நான்கு வாய்மைகளையும் உணர்தல், பாவ புண்ணியங்களைப் பகுத்தறிதல், உலகின் நிலையாமையைக் கண்டு, உண்மைப் பொருளை நாடி அறிதல். நல்லுாற்றம்: அவாளை அறுத்து. துவே ம். கொடுமை முதலியவற்றிலிருந்து மனத்தைப் பாதுகாத்தல் நல்வாய்மை: பொய், புறங்கூறுதல். இன்னாள் சொல். வீண் பேச்சு முதலியவற்றை நீக்கி வாய்மை, அடக்கம், இன்டெல் பயனுள்ள அற ஆராய்ச்சி முதலிய நற்பண்புகளை வளர்த்தல்

ப. ராமஸ்வாமி 0 77