பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வனங்களும், அவர் அறஉரை பகர்ந்து பிரசாரம் செய்த இயஜருெகம், வைசாலி, சிராவஸ்தி முதலிய நகரங்களும், அவர் முடி வெப் , குசீநகரமும் உலகப் பிரசித்தி பெற்ற தலங்களாகி விட்டன. புத்தப் பிறந்து, வாழ்ந்து, மறைந்த பாரத பூமியே பெளத்தர்களுக்குப் புனித பூமியாக விளங்குகின்றது. 'வாவியெல்லாம் தீர்த்தம், மனலெல்லாம் வெண்ணிறு காவனங்களெல்லாம் கணநாதர்-பூவுகில் ஈது சிவலோகம்...' என்று பட்டினத்தடிகள் கூறியுள்ளதை நோக்கினால், பக்தர்கள் கண்ணுக்குத் திருப்பதிகள் எப்படிக் காட்சியளிக்கும் என்பது புலனாகும். புத்தரால் தோன்றிய புரட்சி 'புத்த ஞாயிறு ' என்று புத்தரைக் கதிரவனாகப் போற்றுகிறது ‘மணிமேகலை . மக்களின் மன மாசுகளாகிய இருளைப்போக்க வந்த ஒளிப்பிழம்பு புத்தர். மேலும், அவர் தோன்றிய காலத்தே, இந்நாட்டிலும், உலகிலும் இருள் அடர்ந்திருந்தால், அதை நீக்கத் தோன்றிய செங்கதிராகவே அவரைக் கொள்ளலாம். அவர் தோற்றத்தால், எங்கணும் ஒளி பரவியது, எங்கணும் உணர்வு இனிதாய் மலர்ந்தது; அறங்கள் எழுந்தன, மறங்கள் மங்கி மறைந்தன; மக்கள் மனதில் அன்பு நிறைந்தது. புத்தர் பிறந்ததிலிருந்து இந்நாட்டி ல் ஏற்பட் புதுமைகளுக்கு அளவேயில்லை. அவர் ஒளிபரவாத இடமில்லை, அதனால், துலங்காத பொருளேயில்லை. நாடு, நகரம், சாதி, மயங்கள், அறங்கள், ஒழுக்கங்கள் - யாவும் அந்த ஒளியில் நன்முறையின் மாற்றம் பெற்றன. புத்தர் காட்டிய நெறியாலே லல்ெ (பக்.யொப் பாரத நாட்டிலும், பல ஆசிய நாடுகளிலும் மக்கள் வாழ்க்கையிலே பெரும் புரட்சியே தோன்றிவிட்டது! புத்தர் காட்டிய நெறியை அருளறம் என்று பெரியோர் புகழ்வர். அவர் எத்தகைய அருளை தேசித்தார் என்பதற்குச் சுத்தநிபாத நூலில் ஒரு ா லுண்டு. அதன் கருத்து வருமாறு: 'தாய் தன் ஒரே சேயை அரவனைத்துப் போற்றுவது போல ங்கள் அன்பு உலகில் பரவட்டும்; ஒவ்வோர் பிரையும் அரவனைத்துக் கொள்ளட்டும்; தடையற்ற பதந்திரத்துடனும் அது உயரேயும் கீழேயும் பறக்கட்டும் துவேஷமும் பகையும் விலகி யொழியட்டும்' JJo, I ப. ராமஸ்வரிமி 7