பக்கம்:புத்த ஞாயிறு.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8

கோவில் திருவிழாக்களும் அழைக்கா விட்டால் பிழைக்க முடியாதே' என்று அஞ்சாமல் தினசரி மேடைகளில் நடித்து வளம் பெற்று வாழ்வதற்கு ஏற்ற தனி நாடகத் தியேட்டர்கள் தமிழ்நாட்டின் பெரிய நகரங்களிலெல்லாம். வந்துவிட்டால் இக்கலை வளரத் தடையே இல்லை. நாடகம் உயிரோட்டமுள்ள கலை! பல்லாயிரங் காலத்துப் பயிர். அது நலிந்தால் தமிழே நலிந்த மாதிரி. நாடகம் நவியக் கூடாது. நலிய விடக் கூடாது. படிக்கவும் நடிக்கவும் ஏற்ற நாடகங்கள் தமிழில் நிறைய வெளிவர வேண்டும். என்ற விருப்பத்தின் விளைவே புத்த ஞாயிறு முதலிய இத். தொகுதியின் நாடகங்கள். மேடை நாடகம் தவிர வானெலி, தொலைக்காட்சிக்கும் இன்று நாடகங்கள் தேவைப்படுகின்றன. நாடகக் கலை கருத்துக்களை மக்களை நோக்கிக் கொண்டு செல்லும் தற்காலச் சாதனங்களில் மிகவும் கூரானது என்பதை யாவரும் அறிவர். புத்த ஞாயிறு முதலிய நாடகங்கள் இப்பயனை ஒரளவேனும் விளைவிக்குமாயின் மகிழ்ச்சி கொள்வேன். இதனை நூல் வடிவில் கொணரும் தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும், வாசகர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். -

தீபம் - சென்னை } 30-11-85 J

அன்புடன்,

- * * * - - • ? கா. பார்த்தசாரதி