பக்கம்:புத்த ஞாயிறு.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 111. தால் தான் மனைவிக்கு சகதர்மிணி என்று ஒரு பெயர் வைத்திருக்கிருர்கள். இவள் என்னுடைய சகதர்மிணி நான் ஒரு பெரிய ஆசிரியர் என்பதற்காகவும், என்னு டைய கதைகளும், கவிதைகளும், நாவல்களும் பல்லா யிரக் கணக்கானவர்களைக் கவர்ந்து சிந்திக்க வைத் திருக்கின்றன என்பதற்காகவும் நான் பெருமைப். படுகிறேன். இதை விடவும் இவள் என்னுடைய மனைவி யாக இருக்கிருள் என்பதற்காகவே நான் அதிகமாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பார்வையால் தான் கருத்துப் பிறக்கிறது. முதலில் கருத்து என்பது கண்களில்தான் பிறக்கிறது. பின்புதான் எண்ணத்தில் அது இணைகிறது. எனக்காக இவள் பார்க்கிருள். இவள் பார்த்தவற்றை நான் நினைக்கிறேன். பார்வை இவளுடையது. அதன்மீதான கருத்துக்கள் என்னுடை யவை.இவளை நான் வெறும் மனைவியாக நினைக்கவில்லை. என்னுடைய எழுத்திலும் எண்ணத்திலும் நிரம்பியிருக் கிற எல்லாவிதமான அழகுகளும் அருமைகளும் இவ ளுடைய இன்னருள் நிறைந்த கண்களிலிருந்துதான் தொடங்குகின்றன என்று எனக்கு ஒரு நம்பிக்கை

இப்படி முழுக்க முழுக்க என் மனைவி சுகுணுவைப் பற்றியே இங்கு பேச நேர்ந்து விட்டது. எனினும், என்னுடைய எல்லையற்ற வாஞ்சைக்கும், அன்புக்கும் பாசத்துக்கும் உரியவள் அல்லவா இவள்? -

காட்சி-8

. . - நாடு திரும்பிய பின்

(ஒரு மாலை நேரம்...வீட்டில் வழக்கம் போல் மணி மாலை வேலைகள். சுகுளுவும் குமாரகவியும்)

குமாரகவி இன்று பகல் உணவின்போது பால்பாயசம் பரிமாறினயே...ஏன் என்றுகேட்டால், அப்புறம் சொல்