பக்கம்:புத்த ஞாயிறு.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 119

மனக் கண்ணுக்குத் தோன்றிய்ை! ஏனென்ருல் ஒரு மானிடப் பெண்ணுக்கு இத்தனை பொறுமையும் நிதான மும் வர முடியாதென்று எண்ணி உன்னைத் தேவதை யாக நினைத்து வரித்திருந்தேன் நான்...

சுகுளு: (விம்மி வெடிக்கிருள்) என்னுடைய மெளனமும் மாறுதல்களும் உங்களை எப்படியோ தவருக எண்ணச் செய்து விட்டன. தெய்வமே! நான் சொல்வதை இப் போது நிதானமாகக் கேளுங்கள். என்னுடைய இந்தக் கவலேயும் வேதனையும் உங்களால் நான் அடைந்தவை யல்ல. உங்களை நான் ஒரு விநாடி கூடக் குறைவாக நினைத்து அறியமாட்டேனே...! உங்களுக்குப் பார்வை இல்லையே என்பது என்னே ஒரு போதும் வருத்தியதில்லை தெய்வமே! கண்களிருக்கிற எல்லோரையும்விட நீங்கள் பெரியவர் என்பதை நான் அறியமாட்டேன? உங்க ளுடைய மனத்துக்கே கண்களின் ஆற்றல் உண்டு. கண்ணிருக்கிறவர்கள் அழகாயிருக்கிற பெண்களின் மேல் சந்தேகப்படுகிரு.ர்கள். நீங்கள் யார் மீதும் சந்தேகமே படுவதில்லை. என்னை நம்புகிறீர்கள். உங்க ளுக்காகவும் சேர்த்து உலகைக் காண நம்பிக்கையோடு என் கண்களை நியமித்திருக்கிறீர்கள். ஆகவே உங்களிட மிருந்து நான் எதையும் மறைக்கக் கூடாது. இப்போது நான் கூறப் போகிற விவரங்களைப் பொறுத்தவரை х பார்வை என்னுடையது. இதன் மீதான அபிப்பிராயம் இனி உங்களிடமிருந்துதான் தெய்வமே பிறந்தாக வேண்டும். உங்களை மனத்தில் என்மேல் உருவாகியிருக் கும் எல்லையற்ற அபிமானம் எங்கே குன்றிப்போய் விடுமோ என்று பயந்து போய்த்தான் இந்தப் பதினைந்து நாட்களாய் இதை நான் உங்களிடம் கூருமல் மூடி மறைத்தேன். இப்போது இனியும் அப்படி மறைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நான் உங்களைப் பூரணமாக நம்புகிறேன்... . - . . . . . . . . . . . . . .