பக்கம்:புத்த ஞாயிறு.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 புத்த ஞாயிறு

காபாலி, நீயோ புத்த பிட்சு! உனக்கு உயிர்ப்பயம் என்பது - கூடாது. டயப்படாமல் என்னோடு வா! எல்லாம்

சுற்றிக் காண்பிக்கிறேன்.

பிட்சு: எல்லாம் சுற்றிப் பார்ப்பதற்குள் விடிந்துவிடும் போலிருக்கிறதே? இதைச் சுற்றிப் பார்க்காமலே இந்த நகரத்தில் இவ்வளவு நாள் நான் துறவறம் மேற் கொண்டு நடத்தியிருக்கிறேன் என்பது விந்தையாகத் தான் இருக்கிறது. வாழ்க்கையில் அநுபவச் செல்வங் களைச் சேர்ப்பதற்கே பல ஆண்டுகள் வேண்டு மென் றல்லவா தெரிகிறது. அறிவின் முதிர்ச்சியே முக்தி.

காபாலி: (மிகவும் கடுமையான குரலில்) எங்களுடைய சமயத்தில் அப்படி எல்லாம் இல்லை; அதை மறுத்து எல்லாவற்றையும் அழிப்பதும் ஒழிப்பதும்தான் எங்கள் சமயம். ஹஹ் ஹ ஹஹா...... (இடி இடியென்று கோரமாகச் சிரிக்கிருன்)

(திரை)

காட்சி-7 இடம்:-இந்திர விகாரம்

(நாட்கள் வாரங்களாகின்றன. வாரங்கள் மாதங்க ளாகின்றன. மாதங்கள் ஆண்டுகளாகின்றன. பூம் புகாரில் இந்திரவிழாக்கள் ஒவ்வொன்ருக வந்து போகின்றன. வேனிற் காலம் மழைக்காலம் என்று பருவ காலங்களும் வந்து வந்து போகின்றன. இந்திர் விகாரத்து இளம் பிட்சு-வயது முதிர்ந்த பிட்சுவிடம் இருந்து இன்னும் கோமுகி தரிசனத்திற்கான அனு மதியைப் பெறவில்லை. ஒரு பூம்புகார் நகரத்துப் பிட்சு வின் வாழ்வில் பெறற்கரிய பாக்கியமாகக் கருதப் படும் மணிப்பல்லவ யாத்திரையும் கோமுகிப் பொய்கையில் நீராடும் பாக்கியமும் இன்னும் அவருக் குக் கிடைக்கவே இல்லை. இந்த நிலையில் மறுபடியும்