பக்கம்:புத்த ஞாயிறு.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56

கோதையின் காதல்

சொல்லிக் கொடுத்தார். இதற்குக் குரல் மட்டும். போதாது. குருமுகமான அருள், குடும்பத்துப் பரம் பரையாய் வரும் தவம், சித்தி எல்லாமே வேண்டும். சங்கீதம் எங்கள் குடும்பத்தின் தவம். தலைமுறை த.ஆ. முறையாய் அக்கினியை அணையாமல் காத்து வரும் முனிவர்களின் வேள்விமுறையைப்போல் இப்படிச் சில அபூர்வ ராகங்களை எங்கள் குடும்பத்தில் ஒடுங்கி. விடாமல் வளர்த்து வருகிருேம். மாந்திரீகம், வசியம் என்று ஏதேதோ சொல்கிறீர்களே, பெரியவரே! சங்கீதமே ஒரு மந்திரம் என்றுதான் என் பாட்டனர் சொல்லுவார். இசை தெய்வத்தையே வசியம் செய்ய: முடிந்த மந்திரமானல் அதே இசையைக் கொண்டு. மனிதர்களே வசியம் செய்வது என்ன பிரமாதம்? சிலரால் அப்படி முடிவதில்லே. அது அவர்களுடைய சொந்தக்குறையே தவிரச் சங்கீதத்தின் குறையில்லை. (பெரியவர் வாய் அடங்குகிறது. அவன் செய்து. காட்டிய இன்னும் சில அற்புதங்களால் கூட்டம் பிரமிப்படைகிறது. கோதையும், அவளுடைய தந்தை. யும் சத்திரத்துக்குத் திரும்புகிருர்கள்)

முதுமகன் : ஏன் அம்மா? என்னவோ போல் ஏங்கிப்

போயிருக்கிருய்? உன்னுடைய கழைக் கூத்துக்கு ஈடாக எதுவுமே இல்லை கோதை! இன்றைக்கு இந்த இசையில் கூட்டம் ஏதோ பொம்மைகளைப்போல் பிரமித்துப் போயிருந்ததே தவிர, நேற்று உன் கூத்தின் போது இருந்த ஆரவாரமும் ஆர்வமும் இன்று. இல்லையே அம்மா? -.

கோதை ஆரவாரமும் ஆர்வமும் இருந்தால் போதுமா

அப்பா? அவையை அப்படியே அடக்கியாள்கிற க.ை யல்லவா உயர்ந்த கலே? இந்த மணவாளன் இருக்கி: ருரே. இவர் தெய்வீக அம்சம் பொருந்தியவர்.

முதுமகன்: (சினம் கொண்டு அவளை உறுத்துப் பார்க்கிருர்)

உன்னுடையகழைக் கூத்துக்கு மூலமான் முதல் வன்ப்பே.