பக்கம்:புத்த ஞாயிறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 移鑫

டாம். மணவாளனுடைய குரல் எந்த வெள்ளிக் கிழமையாவது இந்த மலை முகட்டிலிருந்து ஒலிக்கத் தவறினல் அன்று அவன் போய் விட்டான் என்று புரிந்து கொள்ளுங்கள்...என்று உங்கள் தேவியிடம் போய்ச் சொல்லுங்கள். இங்கே இனியும் நிற்க வேண்டாம். போய்விடுங்கள்... (வெகு அலட்சியமாக அவர்களைப் போகச் சொல்லி விட்டு, வீசுகிற மலைக்காற்றுக்கு நடுவே சின்னஞ் சிறு அகல் விளக்கைப் பொருத்தி வைக்கிருன். தீபவர்த்தினி ராகம் அங்கே அவனிடமிருந்து சுகமாகச் சுழன்று வருகிறது.)

காட்சி-11 அரண்மனை

(காரியஸ்தர்கள் வந்து சேதி சொன்னபோது பாளையத்து இளவரசியின் கண்கள் கலங்குகின்றன. காரியஸ்தர்களுக்கே வியப்பூட்டுகிறது அந்தக்கண்ணிர்) ஒரு முதியவரான காரியஸ்தர் : (இளவரசியைத் தனியே சந்தித்து)...என்ன தாயே? எதற்கு இந்தக் கலக்கம், கண்ணிர்? இதன் அந்தரங்கம்தான் என்ன? சொல்லுங்கள் இளவரசி! மோகனவல்லி : தாத்தா! எனக்கு அந்தக் கலைஞர்மேல் அளவுகடந்த வெறுப்பு என்று நீங்கள் எல்லோரும் தவருகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். உண்மை அது வில்லை. அந்தச் சுந்தரக் கலைஞரிடம் எனக்கு இருக்கும் பிரேமை அசுரத்தனமான பிரேமை. நான் அவர் மேல் பிரியப்படுகிற காரணத்தால் அதே விதமான பிரியத்தை அவர் மேலோ அவரிடமிருந்தோ கொள்கிறவர்கள் இந்த உலகில் வேறு எவரும் இருக்கக் கூடாது என்று எண்ணினேன். கழைக் கூத்திப் பெண் கோதை அதற்கு அப்படியொரு தடையாக இருந்தாள். அவளை அவரிட மிருந்து பிரித்துவிட எண்ணினேன். அதற்காகத் தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/83&oldid=597448" இலிருந்து மீள்விக்கப்பட்டது