பக்கம்:புத்த ஞாயிறு.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


82

கோதையின் காதல்

கலையுணர்ச்சியின் இழப்பை அவர் உணரும்படி செய் தேன், என் முயற்சி பலிக்கவில்லை. ஆனல் அந்தப் பெண் கோதை அவர்மேல் கொண்ட பிரியம்தான் என் அன்பைவிட உயர்ந்தது. அவள் அவருடைய கலைத் திறமையையும் சேர்த்து வணங்கிள்ை. அதனுல்தான் அந்தத் திறமை உலகில் பிரகாசிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகத் தன் உயிரையும் தியாகமாகக் கொடுத்து விட்டாள். அவள் தெய்வலோகப் பெண் களின் வகையைச் சேர்ந்தவள். அதனுல்தான் அவளு. டைய காதல் அப்படி உயர்வானதாக இருந்தது. நான் வெறும் மானிடப் பெண்தான். மணவாளன. வெறுப் பது போல் உலகத்துக்குக் காண்பித்துக் கொண்டு அந்த ரங்கமாக அவரைக் காதலித்தேன். ஆனல் அந்த மகா கவிக்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தெரியவில்லையே எனக்கு? நான் பாளையத்து ராணியாக இருந்தும் பேதையாய் வெறும் மானிட ஞாபகங்களோடு இருந்து விட்டேன்...என்னைவிட அந்தப் பெண் கோதைதான் உயர்ந்தவள்...தாத்தா...(பொங்கி அழுகிருள்.)

காரியஸ்தர் : அழவேண்டாம் தாயே! உங்கள் வேதனை

யான அந்தரங்கம் புரிகிறது...அமைதியாய் இருங்கள்

இளவரசி! நான் ஏதேனும் செய்யப் பார்க்கிறேன்...

(கனத்த இதயத்தோடு வெளியே செல்கிருர் அந்த

முதியவர்).

х காட்சி-12

- இடம்:-வனம்

(கோதை மறைவுக்கு பிறகு மாதங்கள் ஒடிவிடுகின்றன.

பங்குனி, சித்திரை, வைகாசி ஆனியும் போய் ஆடி

மாதம்...முதல் வெள்ளிக் கிழமை...அசுரத்தனமான

ஆடிக்காற்றில் சடசடவென்று மூங்கில்கள் முறிகின்றன.

மலைப் பாறையில் ஆடிக் காற்றின் வேகத்தைத் தாக்குப்

பிடித்து நடக்கவே தடுமாறுகிருன் மணவாளன்.

காற்றின் வேகத்தில் மகிழம் பூக்கிளைக் குவியலாகவே