பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் இந்தப் புனைபெயர்? 7. எனது கிறிஸ்தவப் பெயர்தான் அந்தச் சூழ்நிலை”யை உண் டாக்கியது. ஹிந்துக்களின் பத்திரிகைகளில் எழுதுகிறேன் என்று எனது மதத்தார்கள் என்மேல் சீறிஞர்கள். கிறிஸ் துவனுக்கு நம் பத்திரிகையில் இடம் கொடுப்பதாவது என்று சில ஹிந்துப் பத்திரிகை ஆசிரியர்கள் மனம் சுளித் தார்கள்! இதல்ை, என் எழுத்தார்வம் மரண வேதனைப் பட ஆரம்பித்தது. இந்த வேதனே உச்சகட்டத்தை அடைந்தபோதுதான் எனக்கொரு ஞாளுேதயம் பிறந்தது: நான் ஏன் ஒரு புனைபெயர் வைத்துக்கொள்ளக் கூடாது? என் பெற்ருேர் என்னை பாலையா என்று செல்லமாக அழைப்பது வழக்கம். அந்தப் பெயரையே என் புனைபெய ராக வைத்துக்கொண்டு மீண்டும் எழுத ஆரம்பித்தேன். ஆனல் அந்தப் பெயரில் உப்புச் சப்பில்லை என்ற குறை இருந்தது. எனவே, வேருெரு புனைபெயரைத் தேட ஆரம் பித்தேன். - நான் ஓவியக் கலை பயின்று கொண்டிருந்தபோது என் னுடன் மணியம் என்பவரும் (இப்போது கல்கி பத்திரி கையில் பிரபல சித்திரக்காரராய் இருப்பவர்) பயின்று கொண்டிருந்தார். அவர், அமரர் கல்கி எழுதி வந்த பார்த்திபன் கனவு’, மகுடபதி என்ற தொடர் கதை களின் தலைப்புச் சித்திரங்களே வகுப்பறையில் இருந்து கொண்டே எழுதுவார். அதை நான் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பேன். சித்திர ரசனைக்காகவா? இல்லை-அந்தக் கதைக் கதைகளை எழுதும் கல்கி என்ற புனைபெயரைத் திருப்பித் திருப்பிப் படிக்கத்தான்! அந்த மூன்றெழுத்துப் பெயர் என்னே அத்தனை தூரம் கவர்ந்து விட்டது. வைத்தால் இப்படி ஓர் அழகான புனைபெயரை. வைத்துக்கொள்ள வேண்டும்; இல்லையென்ருல் எழுது வதையே மறந்துவிட வேண்டும்!... . . . .