பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 புனைபெயரும் முதல் கதையும் எனக்கு அடிநாள் முதலே, ஆங்கிலக் கவியரசன் ஷேக்ஸ்பியரின் நூல்களைப் படிப்பதில் அபார மோகம். அவனது தலைசிறந்த துன்பியல் நாடகங்களைத் திருப்பித் திருப்பிப் படித்துக் கொண்டிருப்பேன். இயற்கையிலேயே நான் அவலச் சுவைப் பிரியன்! அதற்கு, நான் பிறந்து வளர்ந்து வாழும் சூழ்நிலையும் அனுபவமும் காரணங்களா யிருக்கலாம். எனவே, அவலச் சுவை மன்னனை ஷேக்ஸ் பியரை நான் அடியோடு காதலித்தேன்!... - இந்தச் சமயத்தில், திரு. சுத்தானந்த பாரதியாரின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு நூல்கள் சிலவற்றைப் படிக் கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படிப் படித்த ஏதோ ஒரு நூலில் முன்னுரையில் (விக்தர் ஹியூகோவின், இளிச்ச வாயன் அல்லது ஏழைபடும் பாடு' என்று நினைக்கிறேன்) ஷேக்ஸ்பியர் என்ற பெயருக்கு செகப் பிரியர் என்று தமி ழுருவம் கொடுத்திருந்தார். (கான்டர்பரி என்ற ஊரின் பெயரை திரு. யோகியாரவர்கள் கந்தர்புரி என்றுதான் எழுதுவது வழக்கம்!) இந்தப் பெயர் மொழிபெயர்ப்பு என்னை வெகுவாக ஆகர்ஷித்துவிட்டது. என்னைக் கவர்ந்த உலகப்பெருங்கவிஞன் ஷேக்ஸ்பியர், தமிழில் செகப்பிரியர் ஆனதை எண்ணி யெண்ணி வியந்தேன். இந்த வியப்பு தான். எனக்கு ஒர் அழகான புனைபெயரைத் தேடித் தந் தது. அதுதான் ஜெகசிற்பியன் என்ற பெயர்! இந்தப் பெயரில் ஷேக்ஸ்பியர் என்ற பெயரின் ஒலி மணமும் ஏதோ ஒரு தினுசாக ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று எனக்கு எல்லையற்ற திருப்தி, அந்தத் திருப்தி இன்றும் அழியாமல் இருந்து வருகிறது. இந்தத் திருப்திக்கு இன் ைெரு முக்கிய காரணமும் உண்டு. எனது புனைபெயர் எந்த ஒரு மதத்தின் சார்புள்ளதாகவும் இருக்கக் கூடாது என்று விரும்பினேன்-நான் கடவுள் நம்பிக்கையுள்ளவனே தவிர, மத நம்பிக்கை அற்றவன் என்பதால் (மத நம்பிக்கை யால்தானே கடவுள் நம்பிக்கை பிறக்கிறது என்று சிலர் கேட்கலாம். அப்படி அல்ல என்று என்னல் வாதிக்க முடி