பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 புனைபெயரும் முதல் கதையும் எவ்வளவு நேரம் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டார்களோ-அதெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரி யாது. ஆளுல்இதயத்தின் கனவுகளை ஏட்டிலே புதைக்க வேண்டு மென்ற எண்ணம் மொட்டுவிட்ட அந்த 1939-ம் ஆண்டு முதல், சுமார் மூன்ருண்டு காலம்வரை எனக்கு ஒரு புனை பெயர் வேண்டுமென்று நான் யோசித்த யோசனை இருக் கிறதே-அப்பப்பா! அதை நினைத்தாலும் இப்போது வயிற்றை முறுக்கிக்கொண்டு சிரிப்பு வருகிறது. அதை யெல்லாம் சாங்கோ பாங்கமாகச் சொல்லிக் கொண் டிருக்க நேரமில்லை; அதற்கு இங்கு இடமும் இல்லை. 1939-ஆம் வருஷம் ஜூன் மாதம் நல்லாயன்' என் னும் பத்திரிகையில் சுந்தரனின் சோபனம் என்ற எனது முதல் கதை வெளியானபோது, அதில் தஞ்சை ஜெர்வாஸ்’ என்பதாக வெளிச்சம் போட்டுக் கொண்டேன். (தஞ்சா ஆரில் அப்போது நான் படித்துக் கொண்டிருந்ததால், என் இயற்பெயரின் முன்னல் தஞ்சை என்ற வார்த்தை ஒட்டிக் கொண்டுவிட்டது!) பிறகு எனது சொந்த ஊரான மாய வரம் வந்தபின், புதுவை சர்வ வியாபி'யிலும், மதுரை சத்திய தூதனி லும், மாயவரம் ஜெர்வாஸ் என்ற பெய ரில் போரடித்துக் கொண்டிருந்தேன். பிறகு சென்னைக்கு வந்து, சென்னை சித்திர கலாசாலையில் சேர்ந்து ஓவியம் பயில ஆரம்பித்தேன். அப்போதும் கதைகள் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால், என் பெயருக்கு முன் ஞல் சென்னை' என்று சேர்த்துக் கொள்ளவில்லை. வெறும் ஜெர்வாஸ் என்றே எழுதினேன். இப்படியாகத்தானே எனது எழுத்து வெறி வளர்ந்து கொண்டிருந்தபோது, அது நசுங்கும்படியான ஒரு சூழ்நிலை உருவாகியது. அது என்ன தெரியுமா? மாளாத மன வேதனையுடன் அதைச் சொல்கிறேன்-ஜெர்வாஸ் என்ற