பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கதி’ என் புனை பெயர் தெரியும். ஏன் என்று தெரிய வேண் டும். இன்று, தமிழ் நூல்கள் பள்ளிப் படிப்புக்கும் அப் பால் ஏராளமாகக் கிடைக்கின்றன. நான் படித்த காலத் தில்-கால் நூற்ருண்டுக்கு முன்-ஒரு சில தமிழ் நாவல் களே உரை நடைச் செல்வ்மாய் இருந்தன. தமிழைப் படித்துப் பட்டம் பெற்ற வித்வான்கள், பண்டிதர்கள் மட்டுமே எழுதலாம், மற்றவர்கள் எழுதக் கூடாது என்று எண்ணி வ்ந்தேன். பள்ளிப் படிப்பின் பயன் இது. பின்னர் ‘விகடன் படித்தேன். என்னேக் கவர்ந்தது. கல்கி'யைக் கண்டேன். கண்டறியாதனவெல்லாம் கண்டேன். வாரா வாரம் படிக்காமல் தீராத பகுதியாகி விட்டது. பள்ளிக்கூடத்திற்கும் அப்பால் இலக்கியம்-உரை நடைச் செல்வம் உண்டென்றும், கதை எழுதிவரும் ஆசிரி யர்கள் பட்டம் பெற்றிருக்க வேண்டியதில்லை யென்றும் அறிந்தேன். இந்த எழுத்தாளர்களுக்குள் சகல துறையி லும் என்னைக் கவர்ந்தவர் கல்கி. பல்லாயிரம் வாசகர் களுக்குள் நானும் ஒருவகை இருந்தவன். சிறந்த வாசகன் எழுத்தாளன் ஆக முடியும் என்ற நம்பிக்கை ஏழைகளின் தோணி என்ற கதையாக உருப் பெற்றது. என் முதல் சிருஷ்டியைத் தாங்கும் பெயர் என்ன? என். சுப்பிரமணியம் என்று எழுதினேன். தமிழ் நாட்டில் வீட்டிற்கு மூன்று