பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் இந்தப் புனைபெயர்? 11 பெயர் சுப்பிரமணியங்கள்! தனித்து நிற்க வழி என்ன? வழி என்ன? புனை பெயர் ஒன்றே, தமிழ் நாட்டில் சுப்பிர மணியர்கள் பல்லாயிரம் இருந்தாலும், தனித்துச் சொல் லும். இரண்டு மூன்று நாள் வாதனை: திடீரென்று மனசிலே பளிச்சிட்டது. யார் என்ன எழுதும்படி ஆட்டுவிக்கிருர்? எனக்கும் அப்பால் ஒரு சக்தி என்னிடம் குடி கொள்ளும் படி செய்திருக்கிறதே? அந்த மனோரஞ்சித மலர் தந்த தெம்பும், ஊக்கமும் அல்லவா நான் எழுதும்படி ஆயிற்று! என் பெயரோடு, அந்தப் பெயரை-தமிழ்ப் பூங்காவின் மனேரஞ்சித மலரின் முதலெழுத்தை ஒட்டுக் கட்டிக் கொண்டேன். அமரர் ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய 'கல்கி'யிலுள்ள 'கி' என்னுடைய புனைபெயரில் பாதி. மல ரோடு சேர்ந்த நார் என்றும், உயிரோடு சேர்ந்த உடலென் றும், சக்தியோடு சேர்ந்த சிவம் என்றும் என் புனைபெயரை நீங்களே சொன்னல், அது மிகையல்ல. விகடன், கல்கி' இரு பத்திரிகை வழியாகத் தமிழ் அன்பு நிறைந்த இளம் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் கி. பேளு மன்னரைக் காதலித்த உள்ளங்களில் என் உள்ளமும் ஒன்று. இதற்கு என் புனைபெயர் சான்று.