பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 வல்லிக்கண்ணன் தமிழ் எழுத்தாளர் முதலாவது மகாநாடு கோவையில் கூடியிருந்தது. 1944-ம் வருஷம் என்று நினைக்கிறேன். வெற்றிகரமாக நிகழ்ந்த அம் மகாநாடு எழுத்தாளர்கள் அனைவரையும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைக்க முயன் றது. அந்தச் சந்தர்ப்பத்தில் நானும் சுய விளம்பரம்’ செய்ய முன் வந்தேன். "நான்தான் வல்லிக்கண்ணன். நான்தான் நையாண்டி பாரதி. நான்தான் கோரநாதன். நான்தான் பிள்ளையார். நான்தான் சொக்கலிங்கம். நான்தான் மிவாஸ்கி. நான் தான் கெண்டையன் பிள்ளை. நான்தான் சோம்பேறி. நான்தான் சொளு முனு. நான்தான் கனவானந்தா. நான் தான் இளவல்’ என்று அடுக்கிக் கொண்டு போனேன். எல்லோரும் பிரமித்து விட்டார்கள் என்று நான் சொன் ல்ை அது அளப்பு ஆகாது! - ‘என் பெயர் ரா. சு. சிருஷ்ணஸ்வாமி என்று நான் அப் பொழுது சொன்னேனே, இல்லையோ!-இன்று எனக்கு நினைவு இல்லை. - இப்பொழுது ஏன் இந்தப் புனை பெயர்?’ என்று விளக் கம் தருமாறு கேட்கிருர் நண்பர் பூவை ஆறுமுகம். எந்தப்