பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் இந்தப் புனைபெயர்? 13 பெயருக்கு நான் விளக்கம் தரவேண்டுமென எனக்கு விளங்கவில்லை! - - பெயரில் என்ன இருக்கிறது?’ என்று புலம்பி விட் டான் கவிஞன். ஆனல் பெயரில் எவ்வளவோ மகத்துவம் இருக்கிறது: மர்மமும் இருக்கிறது. இது ஒவ்வொரு எழுத் தாளருக்கும் தெரிந்திருக்கும். அழகான பெண் பெயர்’ சூடி எழுத ஆசைப்படுகிற ஒரு சிலருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்! . 'புனை பெயர் வேண்டியதுதான்; ஒருவனுக்கு ஏன் ஒரு டஜன் பெயர்கள்?’ என்று சிலர் என்னிடம் கேட்பது உண்டு. யாருமே தனி ஒரு பெயருடன் வாழ்வதில்லை என்பது என் கருத்து. பெயர் சூட்டு விழா'வின் போது இடப்படு கிற பெயர் தான எல்லோராலும் அழைக்கப்படுகிறது? மாமனர் பெயரைச் சொல்லாத அம்மா ஒரு பெயரால் அழைக்கிருள்; வேருெருவர் வேருெரு செல்லப் பெயரால் கூப்பிடுகிருர், பிறர் சூட்டும் பட்டப் பெயர்கள் வேறு! உலக நியதியே இப்படி இருக்கிறது. எனக்கு நானே ஏன் பல பெயர்கள் சூட்டிக்கொள்ளக் கூடாது என்று எண்ணி னேன். பல நாமங்கள் பெறும் உரிமை கடவுளுக்கு மட்டும் தான் ரிஸர்வ்டு என்ற கண்டிப்பு எதுவும் இல்லை அல்லவா? கடவுளோடு போட்டி போடுவதாக நம்புகிற இலக்கிய கர்த்தாவும் பல பெயர்கள் சூட்டிக் கொள்வதில் தவறு எதுவுமே கிடையாது என்பது என் கட்சி. - - சாதாரண ரா. சு. கிருஷ்ணஸ்வாமி ஆக எழுத ஆரம் பித்திருந்த நான் வல்லிக்கண்ணன் என மறுமலர்ச்சி பெற் றது ரசமான விவகாரம் தான். - : 1939-ல் தமிழ் நாட்டில் பரபரப்பு ஊட்டும் பத்திரி கைகள் சில வாழ்ந்தன. அநேக ஏடுகளில் தூங்காதே, தமிழா! துள்ளி எழுந்திரு! நிமிர்ந்து பார்! கொட்டாவி விடு' என்ற தன்மையில் விறுவிறுப்பான எழுத்துக்களே.