பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 புனைபெயரும் முதல் கதையும் நிறைந்திருக்கும். அத்தகைய உற்சாக உணர்ச்சித் தீ மயக் கட்டுரைகளை நானும் ஒரு பத்திரிகையின் ஒவ்வொரு இதழிலும் எழுதி வந்தேன். வேருெரு ஆரம்ப எழுத் தாளருக்கு அது பிடிக்கவில்லை. இப்படி ஒரு நபரே இதழ் தோறும் எழுதி வருவது நல்லதல்ல: ஒவ்வொரு இதழிலும் எழுத ஆசைப்படுவதனால்தான் உங்கள் எழுத்து உயிரற்றுப் போகிறது என்று அவர் சொன்னர். அடுத்த இதழில் ரா. சு. கிருஷ்ணஸ்வாமியின் கட்டுரை இல்லாமலிருந்தது கண்டு அவர் மிகவும் மகிழ்ந்தார். அதைவிட அதிகமான உற்சாகம் கொண்டார். வல்லிக் கண்ணன் எனும் புதிய பேர்வழி எவனே எழுதியிருந்த ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு.

பாருங்கள் ஸார் ! எவ்வளவு உணர்ச்சிகரமான எழுத்து! நெருப்பு மாதிரி நடை! ஆகா!' என்று வியந்து பாராட்டி, அந்தக் கட்டுரையை அவரே என்னிடம் வ்ாசித் துக் காட்டினர். அதை எழுதிய சொள்ளமுத்து நான் தான் என்று நான் அவரிடம் சொல்லவில்லை. ஈன்ற பொழு தினும் பெரிதுவக்கும், தன் மகனைச் சான்ருேன் எனக் கேட்ட தாய்' என்றுதானே வள்ளுவர் சொல்லியிருக்கிருர்? அவர் காலத்தில் எழுத்தாளர்களும் கிடையாது: பத்திரி கைகளும் கிடையாது அன்ருே இருந்திருப்பின், எழுதிய பொழுதினும் பெரிதுவக்கும், தன் எழுத்தை நன்று நன் றெனப் பிறர் போற்றக் கேட்ட எழுத்தாளன் நெஞ்சு’ என்கிற கருத்தை இலக்கண சுத்தமான குறளில் புகுத்தி யிருப்பார் அவர்! .

உங்கள் புனைபெயரின் தத்துவம் என்ன?’ என்று பலர் கேட்பது வழக்கம். தத்துவமுமில்லை, கத்திரிப் பிஞ்சு மில்லை. ராஜ வல்வி புரம் கிருஷ்ணஸ்வாமி என்பதன் பரிணமிப்பு தான் வல்லிக்கண்ணன் ஆகும் என்பதே எனது பதில்.